CBI இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகல்.....

CBI இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகல்.....

Last Updated : Jan 21, 2019, 11:58 AM IST
CBI இடைக்கால இயக்குனருக்கு எதிரான வழக்கு: தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகல்.....  title=

CBI இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகல்.....

CBI இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமிக்கப்பட்டதை எதிர்க்கும் வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். CBI இயக்குநரை தேர்வு செய்யும் குழுவில் இருப்பதால் வழக்கில் இருந்து விலகுவதாக ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார். 

CBI இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மோதல் விவகாரத்தில் இருவரும் நீக்கப்பட்டு நாகேஷ்வர ராவ் தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டார். நாகேஷ்வர ராவ் மீது ஏராளமான புகார்கள் இருப்பதால் அவரை CBI இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும், CBI இயக்குநர் நியமிக்கப்படுவதில் வெளிப்படைத் தண்மை இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக நான் இருப்பதால் இந்த வழக்கை 24 ஆம் தேதி இரண்டாவது அமர்வு விசாரிக்கும் என்று கூறி தலைமை நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே, சிபிஐ இயக்குநரை நியமிப்பதற்கான உயர்மட்ட கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Trending News