பிராந்திய ஒற்றுமையை குலைப்பதாக அமெரிக்காவை குற்றம் சாட்டியது சீனா!!

சீனா மைக் பாம்பியோவை அவதூறாக பேசியதுடன், பெய்ஜிங்கிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை விதைத்ததாகவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவதாகவும் குற்றம் சாட்டியது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 28, 2020, 11:55 AM IST
  • அமெரிக்க-இந்தியா 2 + 2 பேச்சுவார்த்தையின் மூன்றாம் பதிப்பிற்காக பாதுகாப்புச் செயலாளர் மார்க் டி எஸ்பருடன் திங்களன்று பாம்பியோ இந்தியா வந்தார்.
  • சீனாவிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை விதைப்பதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.
  • இந்திய பயணத்திற்குப் பிறகு, பாம்பியோ இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு செல்லவுள்ளார்.
பிராந்திய ஒற்றுமையை குலைப்பதாக அமெரிக்காவை குற்றம் சாட்டியது சீனா!! title=

புதுடெல்லி: அமெரிக்கா இந்தியா இடையிலான நட்பு சீனாவிற்கு பதட்டத்தையும் பீதியையும் கிளப்பி வருகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் (Mike Pompeo) இந்தியப் பயணம் சீனாவை சீண்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை, சீனா மைக் பாம்பியோவை அவதூறாக பேசியதுடன், பெய்ஜிங்கிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை விதைத்ததாகவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவதாகவும் குற்றம் சாட்டியது.

ஒட்டுமொத்த இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதையும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செயலுத்தி ஒத்துழைப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட முக்கியமான 2 + 2 பேச்சுவார்த்தைகளுக்காக பாம்பியோ இந்தியாவுக்கு வந்துள்ள இந்த நேரத்தில் சீனா இவ்வாறான கருத்துகளை வெளியிட்டுள்ளது.

ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ​​சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பினிடம் பாம்பியோவின் இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளுக்கான பயணம் குறித்து கேட்கப்பட்டது. அந்த நேரத்தில் அமெரிக்காவின் உயர்மட்ட தூதரின் கவனம் சீனாவின் மீது இருக்கும் என்ற பரவலான கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில், பாம்பியோவின் சீனாவுக்கு எதிரான தாக்குதல்களும் குற்றச்சாட்டுகள் புதிதல்ல என்று வாங் கூறினார். அவர் (பாம்பியோ) இவ்வாறு பல முறை செய்துள்ளார் என்றும் வாங் தெரிவித்தார்.

ALSO READ: இந்தியா அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தை என்பது என்ன... எப்போது தொடங்கப்பட்டது..!!!

வாங், “இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். இது அவர் இன்னும் பனிப்போர் மனநிலை மற்றும் கருத்தியல் சார்புகளுடன் ஒட்டிக்கொண்டிருப்பதை பிரதிபலிக்கிறது. அந்த மனநிலையை கைவிட்டு, சீனாவிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை விதைப்பதை நிறுத்துவதோடு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குறைமதிப்பிடாமல் இருக்குமாறு நாங்கள் அவரை கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையில் உயர்தர இராணுவ தொழில்நுட்பம், வகைப்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் தரவு மற்றும் முக்கியமான தகவல்களைப் பகிர அனுமதிக்கும் நீண்டகால பேச்சுவார்த்தை அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (BECA) இந்தியாவும் அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன. இந்த நேரத்தில் வாங் இப்படிப்பட்ட கருத்துகளை முன்வைத்துள்ளார்.

BECA கையெழுத்திடப்பட்டது இருதரப்பு பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவுகள் மேலும் வலுப்பெற்றிருப்பதைக் குறிக்கிறது. மேலும் இது கிழக்கு லடாக்கில் சீனா இந்தியாவிற்கு இடையில் உள்ள பதட்டமான சூழலின் பின்னணியில் கையெழுத்திடப் பட்டுள்ளது.

அமெரிக்க-இந்தியா 2 + 2 பேச்சுவார்த்தையின் மூன்றாம் பதிப்பிற்காக பாதுகாப்புச் செயலாளர் மார்க் டி எஸ்பருடன் திங்களன்று பாம்பியோ இந்தியா வந்தார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

அவரது இந்திய பயணத்திற்குப் பிறகு, பாம்பியோ இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு செல்லவுள்ளார். 

ALSO READ: வட கொரிய சிறைகளில் மனிதர்கள் விலங்குகளாகக் கூட நடத்தப்படுவதில்லை: பகீர் Report!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News