CBSE Class 10, 12 Results 2023: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2023ஆம் ஆண்டின் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. CBSE 10வது மற்றும் 12வது முடிவுகளை இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் வெளியிடப்படலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தேதி குறித்து சிபிஎஸ்இ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் பின்வரும் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் அறிவிக்கப்படும்.
- results.cbse.nic.in
- cbse.gov.in
CBSE Class 10, 12 Result 2023: தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
- சிபிஎஸ்இ வகுப்பு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகள் 2023 வெளியிடப்பட்டதும், மாணவர்கள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான results.cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகியவற்றில் இதை பார்க்கலாம்.
- சிபிஎஸ்இ இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், மாணவர்கள் 'Result' பிரிவில் உள்ள 'Secondary School Examination Class X Results 2023 Announced' அல்லது Senior School Certificate Examination Class XII Results 2023 Announced' இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டும்.
- மாணவர்கள் அதன் பிறகு புதிய பக்கத்திற்கு அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்கள் தங்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு ரோல் எண், பள்ளி எண், பிறந்த தேதி மற்றும் அட்மிட் கார்டு ஐடி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
- அதன் பிறகு மாணவர்கள் 'Submit' பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும். பின், சிபிஎஸ்இ 10/12 வகுப்பு தேர்வு முடிவுகள் அவர்களின் மொபைல்/டெஸ்க்டாப் திரைகளில் தோன்றும்.
CBSE result 2023: 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை செக் செய்யும் இணையதளங்கள்
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் பார்க்கலாம்:
1. cbse.gov.in
2. results.cbse.nic.in
3. parikshasangam.cbse.gov.in
CBSE result 2023: பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி, ஏப்ரலில் நடத்தப்பட்டன
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடைபெற்றன. சிபிஎஸ்இ தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி இரு வகுப்புகளுக்கும் தொடங்கி மார்ச் 21-ம் தேதி 10-ம் வகுப்புக்கும், ஏப்ரல் 5-ம் தேதி 12-ம் வகுப்புக்கும் முடிவடைந்தது.
இந்த ஆண்டு 38 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வில் 21,86,940 மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 16,96,770 மாணவர்களும் கலந்துகொண்டனர்.
CBSE result 2023: 2023-24 அமர்வுக்கான தேர்வு வடிவம் மாற்றப்பட்டுள்ளது
2024 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான மதிப்பீட்டுத் திட்டத்தை சிபிஎஸ்இ மறுசீரமைத்துள்ளது. இதில் குறுகிய (ஷார்ட்) மற்றும் நீண்ட (லாங்) விடைகளுக்கு கொடுக்கப்படும் மதிப்பீடுகள் குறைக்கப்பட்டு மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் (MCQs) அதிகரிக்கப்படும். இந்த நடவடிக்கை தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 பரிந்துரைகளுடன் மதிப்பீட்டை படிப்படியாக சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அதிகாரிகளின் கூறியுள்ளனர்.
எனினும், இந்த மாற்றம் 2023-24 கல்வி அமர்வுக்கு மட்டுமே கூட இருக்கலாம். ஏனெனில் அடுத்த ஆண்டு புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF) அறிமுகப்படுத்தப்படும் என்பதால் போர்டு தேர்வு முறைகள் மீண்டும் மாற்றியமைக்கப்படும்.
மேலும் படிக்க | CBSE Result 2023: சிபிஎஸ்இ 10, 12-ஆம் தேர்வு முடிவுகள், எப்படி சரிபார்ப்பது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ