கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருந்தது அனைவரும் அறிந்ததே.
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் மதிப்பெண்ணை எவ்வாறு கணக்கிடுவது, அதன் அடிப்படையில் எந்த முறையில் முடிவுகளை நிர்ணயிப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
இந்நிலையில், பள்ளிகள் மதிப்பெண் கணக்கிடும் பணியை ஜூலை 22ம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ (CBSE) தெரிவித்திருந்தது. தற்போது இந்த கால அவகாசத்தை ஜூலை 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியானபிறகு, அதில் திருத்தம் தேவைப்படும் மாணவர்களுக்காக மீண்டும் விருப்பத் தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி போன்ற விபரங்களை அறிவிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | பொறியியல், கலைக் கல்லூரிகளில் சேர 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் பொன்முடி
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் CBSE 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகளை காணும் செயல்முறையை இங்கே காணலாம்:
- cbse.gov.in என்ற சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்துக்குச் செல்லவும்.
- முகப்புப்பக்கத்தில் உள்ள ‘ரிசல்ட்’ டேபை கிளிக் செய்யவும்.
- CBSE Exam Results (சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்) என்ற புதிய பக்கத்துக்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.
- “Secondary School Examination (Class X) 2021” (“மேல்நிலைப் பள்ளி தேர்வு (பத்தாம் வகுப்பு) 2021” )-ல் கிளிக் செய்யவும்.
- சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு ரோல் நம்பர், மைய எண், பள்ளி எண் மற்றும் அட்மிட் கார்டு ஐடியை உள்ளிடவும்
- Submit ஆப்ஷனைக் க்ளிக் செயவும்.
- உங்கள் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்பு முடிவு திரையில் தோன்றும்.
- இதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.
ஜூலை 31 க்குள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால் பள்ளிகள் (Schools) இன்னும் முடிவுகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதால், என்று முடிவுகள் வெளியிடப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று சிபிஎஸ்இ தேர்வுகளின் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறினார்.
ALSO READ:10, 12 வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இந்த தேதியில் அறிவிக்கப்படும்; cbse.nic.in
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR