இந்த ஆண்டு முதல் "நீட்" தேர்வு வினாத்தாள் அனைத்து மாநில மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது.
தமிழ், மராத்தி உள்ளிட்ட மாநில மொழி கேள்வித்தாள், மொழி பெயர்க்கப்பட்டு வழங்கப்படும். மேலும் நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ பிரமாண பத்திரம் தாக்கல்.