CBSE +2 முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சிபிஎஸ்சி பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. www.cbsc.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த  பள்ளிகளிலோ மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 30, 2021, 02:12 PM IST
CBSE +2 முடிவுகள் வெளியானது; முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி  title=

CBSE 12th Result 2021: பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சிபிஎஸ்சி பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. www.cbsc.nic.in என்ற இணையதளம் மூலமோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ மதிப்பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். 
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் CBSE 12 ஆம் வகுப்பு முடிவுகளை காணும் முறை:

*cbse.gov.in என்ற சிபிஎஸ்இ-யின் (CBSE) அதிகாரப்பூர்வ வலைத்தளத்துக்குச் செல்லவும். 

*முகப்புப்பக்கத்தில் உள்ள ‘ரிசல்ட்’ டேபை கிளிக் செய்யவும்.

*CBSE Exam Results என்ற புதிய பக்கம் தோன்றும்.

*Secondary School Examination 2021ல் கிளிக் செய்யவும்.

*சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு ரோல் நம்பர், மைய எண், பள்ளி எண் மற்றும் அட்மிட் கார்டு ஐடியை உள்ளிடவும்

*Submit ஆப்ஷனைக் க்ளிக் செயவும். 

*உங்கள் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு முடிவு திரையில் தோன்றும்.

*இதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு:

*12-ம் வகுப்புப் பருவத் தேர்வுகள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் அல்லது பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 40% மதிப்பெண்கள் வழங்கப்படும்.

*11-ம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்களில் இருந்து 30% மதிப்பெண்கள் வழங்கப்படும்.

*10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் 5 பாடங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் மதிப்பெண்களில் இருந்து 30% மதிப்பெண்கள் வழங்கப்படும்.

மேலும், மதிப்பெண்களின் திருப்தியில்லாத மாணவர்கள் பின்னர் நடக்கும் தேர்வில் கலந்து கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலைகளைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன் மதிப்பெண் கணக்கிடும் முறை செயல்படுத்தப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, ஜூலை 31க்குள் தேர்வு முடிவுகளை (Exam Results) வெளியிடுவதாக சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தது.

ALSO READ: தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News