இந்தியாவில் சரிவை காணும் மாருதி சுசூக்கி கார்கள் விற்பனை!

இந்தியாவின் முதல் நிலை கார் கம்பெனி என்று அறியப்படும் மாருதி சுசூக்கி நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த 3 மாதங்களில் 20% வரை சரிவு கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : May 1, 2019, 09:33 PM IST
இந்தியாவில் சரிவை காணும் மாருதி சுசூக்கி கார்கள் விற்பனை! title=

இந்தியாவின் முதல் நிலை கார் கம்பெனி என்று அறியப்படும் மாருதி சுசூக்கி நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த 3 மாதங்களில் 20% வரை சரிவு கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 163434 கார்கள் விற்கப்பட்ட மாருதி நிறுவனத்தில், 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 131385 கார்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளது.

சிறிய கார் வகைகளைச் சேர்ந்த ஆல்டோ, பழைய வேகன் ஆர் போன்றவை கடந்த ஏப்ரல் மாதத்தில் 22766 மட்டுமே விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்த 2018 ஏப்ரல் மாதம் இவற்றின் மொத்த விற்பனை 37794 ஆகும். இந்த கணக்கின்பனி விற்பனை சரிவு 40% என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேப்போன்று ஸ்விப்ட், செலிரோ, புதிய வேகன்ஆர், பலீனோ, டீஜையர் ஆகியவை சென்ற மாதம் 72146 விற்றுள்ளது. இந்த வகையைச் சேர்ந்த கார்கள் 2018 -ஆம் ஆண்டில் விற்ற எண்ணிக்கை 83834 ஆகும்.

நடுத்தர ரக கார்கள் என்றழைக்கப்படும் செடான் சியாஜ் வகை கார்களின் விற்பனையும் 45% வரை குறைந்துள்ளது இந்த வகையைச் சேர்ந்த கார்கள் 2018 ஏப்ரல் மாதம் 5116 விற்பனையாகியுள்ளன ஆனால் 2019 ஏப்ரலில் 2789 ஆக குறைந்துள்ளது.

குறிப்பிட்ட வகை பயன்பாட்டிற்கென கையாளப்படும் விதாரா, பிரிஸ்ஸா, எஸ்-கிராஸ் ஆகிய கார் வகைகள் விற்பனை மட்டும் 6% உயர்ந்துள்ளது

இந்தப் பிரிவு கார்கள் 2018 ஏப்ரலில் வெற்றி எண்ணிக்கை 20,804 ஆகும், 2019 ஏப்ரல் மாதத்தில் 22,033 ஆக உயர்ந்துள்ளது.

Trending News