தொழிலதிபர் விஜய் மல்லையாவை எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு அழைத்து வரலாம்

வங்கிகளிடம் மோசடி செய்துவிட்டு  லண்டன் தப்பியோடிய மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையாவை எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு அழைத்து வரலாம். சம்பிரதாயங்கள் நிறைவடைகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 4, 2020, 03:19 PM IST
  • 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கிவிட்டு நாட்டிலிருந்து தப்பி ஓடிய விஜய் மல்லையா.
  • ஆர்தர் சாலை சிறைச்சாலையில் (Arthur Road Jail) மல்லையா உயர் பாதுகாப்பு முகாமில் வைக்கப்படுவார்.
  • எஸ்பிஐ உட்பட 17 வங்கிகளில் இருந்து கடன் வாங்கியுள்ளார்.
தொழிலதிபர் விஜய் மல்லையாவை எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு அழைத்து வரலாம் title=

புது டெல்லி: அரசு வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி விட்டு நாட்டிலிருந்து தப்பி ஓடிய விஜய் மல்லையா (Vijay Mallya) என்ற மதுபான வியாபாரி எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு அழைத்து வர முடியும். லண்டனில் ஒப்படைப்பு முறைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. விஜய் மல்லையா தனது சட்ட உரிமைகள் அனைத்தையும் பிரிட்டனில் பயன்படுத்தியுள்ளார்.

விஜய் மல்லையா சிபிஐ (Central Bureau of Investigation) மற்றும் இடி (Enforcement Directorate) அதிகாரிகளுடன் வருவார். மும்பை (Mumbai) விமான நிலையத்தில் உள்ள ஒரு மருத்துவ குழு மல்லையாவின் உடல்நிலையை பரிசோதிக்கும். மல்லையா இரவில் மும்பையை அடைந்தால், அவர் சிபிஐ அலுவலகத்தில் சிறிது நேரம் செலவிட வேண்டியிருக்கும். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் படிக்கவும் | இந்தியாவில் இருந்து தப்பிய 51 மோசடி மன்னர்கள் பட்டியல்...

விமானம் பகலில் தரையிறங்கினால், அவர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அங்கு சிபிஐ (CBI) அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரும். இதன் பின்னர், இவரை காவலில் எடுக்க அமலாக்கத்துறையம் கோரிக்கை வைக்கும். 2018 இல் ஒரு வழக்கு விசாரணையின் போது, ​​மல்லையா வைக்கப்படும் சிறை பற்றிய தகவல்கள் மற்றும் வீடியோக்களை இங்கிலாந்து நீதிமன்றம் இந்திய புலனாய்வு அமைப்புகளிடம் கேட்டது. ஆர்தர் சாலை சிறைச்சாலையின் வீடியோ பின்னர் அனுப்பப்பட்டது.

ஆர்தர் சாலை சிறைச்சாலையில் (Arthur Road Jail) மல்லையா உயர் பாதுகாப்பு முகாமில் வைக்கப்படுவார் என்று ஏஜென்சிகள் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தன. ஆர்தர் சாலை சிறையில் உலககின் பெரிய குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். 26/11 மும்பை தாக்குதலில் சிக்கிய ஒரே பயங்கரவாதியான அஜ்மல் அமீர் கசாப்பும் அதே பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டார்.

இதையும் படிக்கவும் | கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த விஜய் மல்லையா; திருடன் என கூச்சலிட்ட ரசிகர்கள்

13,500 கோடி ரூபாய் பி.என்.பி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அபு சேலம், சோட்டா ராஜன், முஸ்தபா தோசா, பீட்டர் முகர்ஜி மற்றும் விபுல் அம்பானி ஆகியோரும் இந்த சிறைச்சாலை அனுபவத்தை பெற்றுள்ளனர். 

9 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடன் மோசடியில் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எஸ்பிஐ உட்பட 17 வங்கிகளில் இருந்து கடன் வாங்கியுள்ளார்.இந்திய விசாரணை ஏஜென்சிகள் பிடியை இறுக்கிய பின்னர், மல்லையா (Vijay Mallya) பல முறை வங்கி பணத்தை திருப்பித் தரவும் முன்வந்தார். மே 14 அன்று, பிரிட்டன் உச்ச நீதிமன்றம் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதையும் படிக்கவும் | முழு கடனையும் அடைத்துவிடுகிறேன்; மீண்டும் மல்லையா கோரிக்கை!

Trending News