இந்தியாவிலும் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் - சிவசேனா!

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை அரசு இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிவதற்கு தடை விதித்தது போல் இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது!

Last Updated : May 1, 2019, 09:48 PM IST
இந்தியாவிலும் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் - சிவசேனா! title=

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கை அரசு இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்கும்படி புர்கா அணிவதற்கு தடை விதித்தது போல் இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது!

இலங்கையில் நடைப்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றது.

இதைத்தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இஸ்லாமிய பெண்கள் முகத்தை மறைக்கும் வகையில் புர்கா மற்றும் நிகாப் எனப்படும் முகத்திரை ஆகியவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இதுபோன்று இஸ்லாமிய பெண்கள் பொது இடத்தில் புர்கா அணிவதை தடை செய்ய வேண்டும் என சிவசேனா கட்சி தன் சாமனா பத்திரிகையின் தலையங்கம் பகுதியில் வலியுறுத்தியுள்ளது.

இதில் குறிப்பிட்டுள்ளதாவது., பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தும் போது முக அடையாளம் தெரியாமல் போவதை தடுக்க இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

புர்கா, நிகாப் மூலம் முகத்தை மறைப்பவர்களால் தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தான் அவசரகால நடவடிக்கையாக இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேப்போன்று இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கையாக பெண்கள் புர்கா மற்றும் நிகாப் அணிய தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளில் ஏற்கெனவே இவ்வாறு பெண்கள் புர்கா, நிகாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News