Interim Budget 2024 Big Announcements: மோடி அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்று வருகின்றது. அதன்படி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பட்ஜெட்டில் நான்கு தரப்பினர்களின் (ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள்) வளர்ச்சிக்கு அதிகபட்ச கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நான்கு பெரிய தரப்பினரைப் பற்றி சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியே கூறியிருந்த நிலையில் தற்போது இந்த நான்கு தரப்பினருக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கி திட்டங்களை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு என்ன அறிவிப்பு?
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சி குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அனைவருக்கும் வீடு, ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர், அனைவருக்கும் மின்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் படிக்க | Budget 2024: கடந்த பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள் என்ன என்ன தெரியுமா?
மேலும் பேசிய அவர், 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டது என்றார். இது தவிர விவசாயிகளுக்கு MSP உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், கிராமப்புற பொருளாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அனைத்து நியாயமான மக்களுக்கும் அரசின் திட்டங்களின் பலன்களை வழங்க வேண்டும் என்பதில் வலியுறுத்தப்பட்டது. அரசின் கவனம் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மீது இருந்தது என்றார். மேலும் ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம் என இடைக்கால பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
We need to focus on the poor, women, youth and farmers / Anna Data Their needs and aspirations and welfare are our highest priority All four require and receive government support, their empowerment and well being will drive the country forward: FM @nsitharaman…
— DD News (@DDNewslive) February 1, 2024
"We need to focus on - Garib, Mahilayen, Yuva and Annadata; Their needs and aspirations are our highest priorities," says Finance Minister Nirmala Sitharaman in her interim Budget speech. pic.twitter.com/6HoDXsdx2R
— ANI (@ANI) February 1, 2024
Finance Minister Nirmala Sitharaman presents the country's interim Budget
"...Our young country has high aspirations, pride in its present and hope and confidence for a bright future. We expect that our govt based on its stupendous work will be blessed again by the people with a… pic.twitter.com/qx1NaLFXtW
— ANI (@ANI) February 1, 2024
மேலும் படிக்க | Budget 2024: இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு கிடைக்கப்போகும் சலுகைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ