டிஜிட்டல் ரேஷன் கார்டுடன் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு நாடு முழுவதும் தொடங்குகிறது..!!!

  இன்று நாடாளுமன்றத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை வழங்கினார். ​​ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாட்டில் தொடங்கப்பட்டதன் மூலம்  கொரொனா காரணமாக இடம்பெயர்ந்த பயனாளிகள் பெரிதும் பயன்பெற்றனர் என்றார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 1, 2021, 11:46 PM IST
  • One Nation, One Ration Card திட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  • இந்த திட்டத்தின் கீழ் 100 சதவிகித பயனாளிகள் மார்ச் 2021 க்குள் சேர்க்கப்படுவார்கள்.
  • இதுவரை 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ரேஷன் கார்டுடன் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு நாடு முழுவதும் தொடங்குகிறது..!!! title=

One Nation One Ration Card Scheme:  இன்று நாடாளுமன்றத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை வழங்கினார். பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது, ​​ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாட்டில் தொடங்கப்பட்டதன் மூலம்  கொரொனா காரணமாக இடம்பெயர்ந்த பயனாளிகள் பெரிதும் பயன்பெற்றனர் என்றார். இதுவரை 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

One Nation, One Ration Card திட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இது வரை அமல்படுத்தப்படாத மீதமுள்ள மாநிலங்களிலும் ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும் என்றார்.

இந்த திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மூலம் பயனாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் தங்கள் ரேஷனைக் கோரலாம். இந்தத் திட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறையை பிரதிபலிக்கிறது என நிதி அமைச்சர் மேலும் கூறினார்.

One Nation, One Ration Card, அதாவது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம், நீங்கள் நாட்டின் எந்த மூலையில் வசித்தாலும், எந்த மாநிலத்தில் இருந்தாலும், நீங்கள் அரசு வழங்கும் ரேஷனை வாங்க முடியும். நீங்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தாலும் புதிய ரேஷன் கார்டை பெற வேண்டிய அவசியமில்லை. உங்கள் பழைய ரேஷன் கார்டு (Ration Card) முழுமையாக செல்லுபடியாகும்.  இந்தத் திட்டம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பயன் அளிக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 100 சதவிகித பயனாளிகள் மார்ச் 2021 க்குள் சேர்க்கப்படுவார்கள்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் இணைய உங்கள் ரேஷன் கார்டு ஆதார் (Aadhaar) எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ALSO READ | மீண்டும் தொடங்குகிறது IRCTC இ-கேட்டரிங் சேவை; உணவை ஆர்டர் செய்வது எப்படி..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News