BREAKING: 6-12 வயது குழந்தைகளுக்கு Covaxin அவசரகால பயன்பாட்டிற்கு DCGI அனுமதி

கொரோனா நான்காவது அலை பீதிக்கு மத்தியில் 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குபாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அனுமது வழங்கியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 26, 2022, 02:10 PM IST
  • இந்தியாவின் மார்ச் 16ஆம் தேதி 12-14 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
  • 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி இந்த ஆண்டு ஜனவரி 3 அன்று தொடங்கியது.
  • இது வரை 187 கோடிக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் போட்டப்பட்டுள்ளது.
BREAKING: 6-12 வயது குழந்தைகளுக்கு Covaxin அவசரகால பயன்பாட்டிற்கு DCGI அனுமதி title=

புது தில்லி: கொரோனா நான்காவது அலை பீதிக்கு மத்தியில், 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாரத் பயோடெக்கின் கோவாக்சினுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) அவசரகால பயன்பாட்ற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ANI செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26, 2022) தெரிவித்துள்ளது.

தற்போது, ​​12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போட Biological E நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் (Corbevax) போடப்படுகிறது , 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவேக்ஸின் செலுத்தப்படுகிறது.

கோவேக்ஸின் இதுவரை 12 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கான அவசர கால பயன்பாட்டிற்கு DCGI ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 24, 2021 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி இந்த ஆண்டு ஜனவரி 3 அன்று தொடங்கியது. இதையடுத்து, இந்தியாவின் மார்ச் 16ஆம் தேதி 12-14 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

மேலும் படிக்க | IIT சென்னையில் எகிறும் தொற்று பாதிப்பு; மேலும் 32 பேருக்கு கொரோனா

கடந்த வாரம், DCGI அமைப்பின் பொருள் நிபுணர் குழு (SEC) ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நிறுவனத்திடம் அதன் கோவிட்-19 தடுப்பூசியை 2-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவது தொடர்பான கூடுதல் தரவுகளைக் கேட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.

கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, நாடு தழுவிய அளவில் தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஏப்ரல் 10 முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசிகளின் பூஸ்டர் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது

இது வரை 187 கோடிக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் போட்டப்பட்டுள்ளது. 2.70 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு இதுவரை 4.68 லட்சம் முன்னெச்சரிக்கை டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 214 மணி நேரத்த்ல் 2,483 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த கோவிட் -19 தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை 4,30,62,569 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 15,636 ஆகக் குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன.

பரிசோதனை செய்தவர்களின் தொற்று உறுதியாகும் விகிதமான தினசரி நேர்மறை விகிதம் தற்போது 0.55 சதவீதமாக உள்ளது என்றும் வாராந்திர நேர்மறை விகிதம் 0.58 சதவீதமாக உள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கும் தமிழக அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News