சென்னை: ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய என்கவுன்டரில் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி (Junior Commissioned Officer, JCO) உட்பட 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பூஞ்சின் எல்லை மாவட்டமான சூரன்கோட் பகுதியில் உள்ள டேரா கி காலி (Dera Ki Gali) என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வீரர்கள் இந்திய ராணுவத்தினர் ஐவர் தங்கள் இன்னியுர் நீத்தனர்.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை (Line of Control(LoC)) கடந்து பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த உளவுத்துறைத் தகவல்களின் அடிப்படையில் ராணுவமும் காவல்துறையும் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டன. இந்த நடவடிக்கையின் போது, பயங்கரவாதிகள் ராணுவப் படையினர் மீது கடும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சேனா பதக்கம் பெற்ற நாயப் சுபேதார் (JCO) ஜஸ்விந்தர் சிங், நாயக் மந்தீப் சிங், சிப்பாய் கஜ்ஜன் சிங், சராஜ் சிங் மற்றும் எச்.வைசாக் ஆகியோர் தாய்நாட்டிற்காக உயர்ந்த தியாகம் செய்தனர்.
Read Also | அக்டோபர் 12; தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
அதில் எச்.வைசாக், 24 வயதான இந்த வீரர் கேரளாவைச் சேர்ந்தவர். குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் அவர் தான். 19 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்த அவர், நாட்டுக்கான தனது கடனை இன்னுயிர் நீத்து அடைத்துவிட்டார். ஆனால், குடும்பத்தின் கடன் இன்னமும் முடிந்த பாடில்லை.
சிறு வயதிலிருந்தே குடும்பத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன், தாய்நாட்டிற்கு சேவை செய்யும் லட்சியத்தையும் கொண்டவர் வைசாக். அவர் தனது தாய்நாட்டிற்கு சேவை செய்வதற்காக ஜம்மு -காஷ்மீரில் (உலகின் மிக ஆபத்தான மோதல் மண்டலங்களில் ஒன்று) தானாக முன்வந்து பணியை பெற்றுக் கொண்டார்.
இந்தியாவுக்காக இன்னுயிரை தியாகம் செய்த கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த இளம் வீரர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடினார். பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வமுள்ள வைசாக் தனது ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை நேசித்தார்.
சொந்த ஊரான ஒடனாவட்டம் கிராமத்தில் வைசாக் கட்டிய புதிய வீட்டிற்கு குடும்பம் 4 மாதங்களுக்கு முன்புதான் குடிபெயர்ந்தது. சொந்த வீடு என்பது வைசாக்கின் குடும்பத்தினரின் நீண்டநாள் கனவு. அது நிறைவேறிய நிலையில், நாட்டிற்காக சேவை செய்யும்போது உயிரிழந்தார் வைசாக்.
Read Also | கொரோனா ஏற்பட Genetic Risk காரணமா? ஆய்வு சொல்லும் பகீர் தகவல்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR