குஜராத் தேர்தல் எண்ணிக்கையை முன்னிட்டு வீழ்ச்சியில் மும்பை பங்கு சந்தை!

குஜராத் தேர்தல் எண்ணிக்கையை தொடர்ந்து மும்பை பங்கு சந்தை 700 புள்ளிகள் சரிவு. 

Last Updated : Dec 18, 2017, 02:43 PM IST
குஜராத் தேர்தல் எண்ணிக்கையை முன்னிட்டு வீழ்ச்சியில் மும்பை பங்கு சந்தை! title=

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

இந்நிலையில், காலை காங்கிரஸ் முன்னிலையில் இருந்ததை அடுத்து மும்பை பங்கு சந்தை சமார் 700 புள்ளிகள் சரிவை சந்தித்தது. பல முக்கிய தலைவர்கள் பல்வேறு தொகுதிகளில் பின்னடைவை சந்தித்தார்கள். பாஜக கட்சியின் முதல்வர் வேட்பாளர் விஜய் ரூபாணியும் பின்னடைவை சந்தித்தார். தற்போது அவர் மீண்டும் முன்னிலை வகித்து உள்ளார். 

இதனால் காலையில் 700 புள்ளிகள் சரிவை சந்தித்த பங்கு சந்தை மீண்டும் ஏற்றம் கண்டு இருக்கிறது. மொத்தமாக தற்போது 720 புள்ளிகள் மும்பை பங்குச்சந்தை ஏற்றம் கண்டு இருக்கிறது.

Trending News