மராட்டிய மாநில அரசின் வருவாய்த்துறை மந்திரியாக ஏக்நாத் கட்சே அங்கம் வசித்தார். அவர் மீது நிலமோசடி புகார், தாவூத் இப்ராகிம் உடன் தொலைபேசியில் பேசியது என சர்ச்சைக்கு உள்ளான இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஏக்நாத் கட்சேக்கு தாவூத் இப்ராஹிமிடம் இருந்து போன் அழை்பு வந்ததாக ஆம் ஆத்மியை சேர்ந்த ஒருவர் தகவலை வெளியிட்டிருந்தார். ஏக்நாத் கட்சே மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி ஆம் ஆத்மி தலைவர் மும்பையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 2-வது நாளாக இன்றும் அவரது போராட்டம் தொடர்கிறது. இதுமட்டும் இல்லாமல் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு மனைவி மற்றும் மருமகன் வாங்க துணை போனதாகவும் கட்சே மீது புகார் எழுந்தது. ஏக்நாத் கட்சேவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
டெல்லியில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. முறைகேடு புகாருக்கு உள்ளானவரை அமைச்சராக நீடிக்க செய்ய பாஜக மேலிடம் விரும்பவில்லை. எனவே மராட்டிய மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்த ஏக்நாத் கட்சே தனது பதவியை ராஜினாமா செய்ததற்கான கடிதத்தை அளித்தார்.