உத்திரபிரதேச மாநில புலந்த்ஷஹர் மாவட்ட கலவரத்தில் தொடர்புடையதாக பாஜக இளைஞரணி தலைவர் ஷிகர் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார்!
உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில், கடந்த டிசம்பர் மாதம் 3-ஆம் நாள் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த இந்த கலவரத்தில், பலர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தை ஒடுக்க சென்ற காவல்துறை அதிகாரி தடுக்கப்பட்டனர். இந்த கலவரத்தில் சுபோத் சிங் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடையவலாஎ மாவட்ட பாஜக இளைஞர் அணி தலைவர் ஷிகர் அகர்வாலை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலைலயில், இன்று விடியற்காலை இவர் புலந்த்ஷஹர் மாவட்டம் ஹர்பூர் அருகே பிடிபட்டுள்ளார்.
Shikhar Aggarwal, accused in murder case of Inspector Subodh Singh in #BulandshahrViolence, arrested by Bulandshahr police from Hapur today pic.twitter.com/xCZqU0aAya
— ANI UP (@ANINewsUP) January 10, 2019
இவரது கைது தொடர்பாக நகர காவல்துறை கூடுதல் கண்கானிப்பாளர் அதுல் குமார் ஸ்ரீவஸ்தா தெரிவிக்கையில்., இன்று காலை புலந்த்ஷஹர் பகுதியில் ஷிகர் பிடிப்பட்டார். குறிப்பட்ட வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
எனினும் மாநில பாஜக தரப்பில் இதுகுறித்து தெரிவிக்கையில்., கைது செய்யப்பட்ட ஷிகரை பிடிப்பதை காட்டிலும் கலவரத்தில் அவர் காவலரை தாக்கிய வீடியோக்களை பரப்புவதிலேயே தீவிரமாக இருந்தனர். குற்றம்சாட்டப்பட்ட ஷிகர் தலைமறைவாக இருந்தார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஷிகர் பல ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்துள்ளார்.
மேலம் தனது நேர்காணல்களில், சம்பவத்தன்று பசு பாதுகாப்பு குறித்து கோஷங்கள் எழுப்பி சென்ற தொண்டர்களை காவல்துறையினர் தான் முதலில் சீண்டினர்., அதன் பின்னரே காவலர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடையே மோதல்கள் வலுத்தது என்பதை குறிப்பிட்டுள்ளார். ஆனால் காவல்துறையினர் சம்பவத்தை மாற்றி தெரிவித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.