அச்சுறுத்தும் கொரோனா; மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

Revised Guidelines for Mild or Asymptomatic Covid-19 Patients: லேசான அல்லது அறிகுறிகள் இல்லாத கோவிட்-19 நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2022, 05:15 PM IST
அச்சுறுத்தும் கொரோனா; மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு title=

புதுடெல்லி: இந்தியாவில் கோவிட்-19 தொற்று (COVID 19) தொடர்ந்து அதிகரித்து வருவதால், மத்திய அரசால் புதிய வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, (Revised Guidelines for Mild or Asymptomatic Covid-19 Patients) லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் வீட்டிலேயே இருப்பார்கள் மற்றும் நோயாளிகள் மூன்று அடுக்கு முகமூடிகளை அணிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொரோனா நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்
* மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வயதானவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்த (Home Quarantine) அனுமதிக்கப்படுகிறது.
* லேசான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் வீட்டிலேயே இருப்பார்கள், இதற்கு சரியான காற்றோட்டம் அவசியம்.
* மூன்று அடுக்கு மாஸ்க் ஐ அணிய வேண்டும்.
* நோயாளிகள் முடிந்த வரை லிக்விட் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 
* எச்.ஐ.வி நோயாளிகள், மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பின்னரே வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்படும்.
* ஆக்சிஜன் 93% க்கும் அதிகமாக இருக்க வேண்டும். அறிகுறியற்ற மற்றும் அறிகுறி இல்லாத நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
* தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லை என்றால் 7 நாட்களுடன் வீட்டு தனிமையை நிறைவு செய்து கொள்ளலாம். 
* வீட்டுத் தனிமையில் இருப்பவர்களை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

ALSO READ | ஓமிக்ரானை ஓரங்கட்டி முன்னுக்கு வருகிறது புதிய IHU மாறுபாடு: பிரான்சில் 12 பேர் பாதிப்பு 

24 மணி நேரத்தில் 58097 புதிய நோயாளிகள்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 56 சதவீதம் அதிகரிப்பு மற்றும் 58,097 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதன் பிறகு இறப்பு எண்ணிக்கை 4,82,551 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது இரண்டு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் உள்ளனர்.

இந்தியாவில் 199 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. முன்னதாக 20 ஜூன் 2021 அன்று, 58,419 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. தரவுகளின்படி, நோயாளிகளின் மீட்பு விகிதம் 98.01 சதவீதம் ஆகும். தினசரி நோய்த்தொற்று விகிதம் 4.18 சதவீதமாகவும், வாராந்திர விகிதம் 2.6 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. நாட்டில் இதுவரை மொத்தம் 3,43,21,803 பேர் வைரஸால் குணமடைந்துள்ளனர் மற்றும் கோவிட் -19 இலிருந்து இறப்பு விகிதம் 1.38 சதவீதம் ஆகும்.

24 மணி நேரத்தில் 56 சதவீத தொற்றுகள் அதிகரித்துள்ளன
செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 37,379 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, ஆனால் புதன்கிழமை, கோவிட் -19 இன் புதிய தொற்றுகள் 58 ஆயிரத்தை தாண்டியுள்ளன, இது நேற்று (டிசம்பர் 4) ஒப்பிடுகையில். , இது சுமார் 56 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

ALSO READ | Coronavirus: அண்டார்டிகாவிலும் கொரோனா! விஞ்ஞானிகளுக்கு கோவிட் பாதிப்பு! இது ஒமிக்ரானா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News