ரிசர்வ் வங்கி முக்கிய அப்டேட்: உங்களிடம் இருக்கும் ரூ.500 நல்ல நோட்டா, கள்ள நோட்டா? இப்படி செக் செய்யலாம்

RBI on Fake Rs. 500 Note: உண்மையான மற்றும் போலியான 500 ரூபாய் நோட்டுகளை எவ்வாறு வேறுபடுத்துவது என்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 15, 2023, 11:25 AM IST
  • சில மாதங்களுக்கு முன், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
  • 2023 செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
  • தற்போது வரை 90 சதவீதத்துக்கும் அதிகமான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டன.
ரிசர்வ் வங்கி முக்கிய அப்டேட்: உங்களிடம் இருக்கும் ரூ.500 நல்ல நோட்டா, கள்ள நோட்டா? இப்படி செக் செய்யலாம் title=

இந்திய ரிசர்வ் வங்கி: சமீபத்தில் இந்திய அரசு 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து நீக்கியது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, வெவ்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தொடர்பாக பல வகையான செய்திகள் வெளிவருகின்றன. உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பெரிய செய்தியாகவும் முக்கியமான செய்தியாகவும் இருக்கும்.

2,000 ரூபாய் நோட்டு

சில மாதங்களுக்கு முன், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனுடன், 2023 செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது வரை 90 சதவீதத்துக்கும் அதிகமான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்துவிட்டன. இதன் மூலம், ரூ.500 நோட்டு நாட்டின் மிகப்பெரிய மதிப்புள்ள ரூபாய் நோட்டாக மாறியுள்ளது. 

500 ரூபாய் நோட்டு

தற்போது 500 ரூபாய் நோட்டு, இந்தியாவின் மிகப்பெரிய மதிப்புள்ள நோட்டு என்பதால், இதன் போலி நோட்டுகளும் (Fake Notes) வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் பண பரிவர்த்தனைகளை மிகவும் கவனமாக செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் சந்தையில் பரவியுள்ள போலி நோட்டுகள் உங்களுக்கு கொடுக்கப்பட்டு நீங்கள் ஏமாற்றப்படலாம். ஆகையால் இந்த போலி ரூபாய் நோட்டுகள் குறித்து மக்கள் கவனமாக இருக்க வேண்டும். 

அத்தகைய சூழ்நிலையில், உங்களிடம் இருக்கும் 500 ரூபாய் நோட்டு போலி நோட்டா அல்லது நல்ல நோட்டா என்பதை அவ்வப்போது சரிபார்ப்பது மிக அவசியமாகும். உண்மையான மற்றும் போலியான 500 ரூபாய் நோட்டுகளை நீங்கள் எவ்வாறு வேறுபடுத்துவது என்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவிக் தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | பங்குச்சந்தையின் புதிய ரிகார்ட் பிரேக்! இதுவரை இல்லாத உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை

அசல் ரூ.500 நோட்டை எவ்வாறு அடையாளம் காண்பது? 

1) 500 ரூபாய் என நோட்டில் எழுதப்பட்டிருக்கும்.
2) 500 ரூபாய் மதிப்பு மறைமுகமாக நோட்டில் அச்சிடப்பட்டிருக்கும்.
3) ஐந்நூறு என்று தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.
4) நடுவில் மகாத்மா காந்தி படம் இருக்கும்.
5) பாரதம் (தேவநாகரியில்) மற்றும் 'இந்தியா' சிறிய அச்சில் எழுதப்பட்டிருக்கும்.
6) 'பாரத்' (தேவாநாகரியில்) மற்றும் 'ஆர்பிஐ' என்ற அச்சுகளுடன் கூடிய பாதுகாப்பு வரி (ஸ்ட்ரிப்) இருக்கும், அதன் நிறமும் மாறும். நோட்டை சிறிது வளைத்தால், பாதுகாப்பு வரியின் நிறம் பச்சை நிறத்தில் இருந்து நீலமாக மாறுவதைக் காணலாம்.
7) உத்தரவாத ஷரத்து, வாக்குறுதி ஷரத்து மற்றும் ஆளுநரின் கையொப்பம் மற்றும் மகாத்மா காந்தியின் உருவப்படத்துடன் வலது பக்கத்தில் ரிசர்வ் வங்கியின் சின்னம் இருக்கும்.
8) மகாத்மா காந்தியின் உருவப்படம் மற்றும் எலக்ட்ரோடைப்பின் வாட்டர்மார்க் (500) இருக்கும்.
9) மேல் இடது மற்றும் கீழ் வலதுபுறத்தில் அதிகரித்து வரும் எண்களுடன் ஒரு எண் குழு இருக்கும்.
10) கீழ் வலதுபுறத்தில், நிறத்தை மாற்றும் மையில் (பச்சை முதல் நீலம் வரை) ரூபாய் சின்னத்துடன் (ரூ 500) ஒரு மதிப்பு இலக்கம் இருக்கும்.
11) வலது பக்கம் அசோக தூண் சின்னம் இருக்கும்.
12) பார்வையற்றோருக்கான சில அம்சங்கள்-
மகாத்மா காந்தியின் உருவப்படம், அசோக தூண் சின்னம், வலது புறத்தில் ரூ. 500 மைக்ரோடெக்ஸ் கொண்ட வட்ட அடையாளக் குறி, இடது மற்றும் வலது பக்கங்களில் ஐந்து கோண ப்ளீட் கோடுகள் இருக்கும்.
13) நோட்டு எந்த ஆண்டில் அச்சிடப்பட்டது என்று இடதுபுறத்தில் எழுதப்பட்டிருக்கும்.
14) செங்கோட்டை வடிவம் இருக்கும்.
15) தேவநாகரியில் குறியீட்டு எண் 500 இருக்கும்.

மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு நல்ல செய்தி: வங்கிகளுக்கு RBI வைத்த செக்... தினமும் ரூ.5,000 இழப்பீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News