Big Breaking: குழந்தைகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி - மத்திய அரசு அனுமதி

கொரோனாவிற்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி ஒன்றே இருக்கும் நிலையில், இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 12, 2021, 01:45 PM IST
Big Breaking: குழந்தைகளுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி - மத்திய அரசு அனுமதி title=

கொரோனாவிற்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி ஒன்றே இருக்கும் நிலையில், இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 95 கோடி  பேருக்கும் மேலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இநிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், குழந்தைகளுக்கான தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையை நிறைவு செய்து, மத்திய அரசிடம் அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த நிலையில்,  இன்று அதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை  தீவிரமகா மேற்கொள்ளப்படும். இதற்காக, கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த ஐதாராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், குழந்தைகளுக்கான தனது தடுப்பூசியை 3 கட்டங்களாக பரிசோதித்து வருகிறது. இதில், இறுதிக்கட்ட  சோதனை தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ | கோவாக்ஸினுக்கு உலக சுகாதார அமைப்பின் அவசர கால அங்கீகாரம் மிக விரைவில்..!!

இந்தியாவில், ஜனவரி மாதம், கோவாக்ஸின் (Covaxin) கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டு,  கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கோவேக்ஸின் கோவிஷீல்ட்  தவிர ஸ்புட்னிக் வி (Sputnik V ) தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

ALSO READ | ZyCov-D கொரொனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? மத்திய அரசு கூறியது என்ன..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News