ஃப்ளோரிடா: ISKCON-ன் தலைமை குருமார்களில் ஒருவரான பக்திசாரு சுவாமி (Bhakti charu Swami) சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர் கொரோனா (Corona) தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். பக்திசாரு சுவாமி அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வந்தார். சில நாட்களாக அவர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த மாதம், ஜூன் 3 ஆம் தேதி, பக்திசாரு சுவாமி அமெரிக்காவுக்கு (America) சென்றார். அங்கு ஜூன் 18 ஆம் தேதி அவரது கொரோனா பரிசோதனை நேர்மறையாக வந்தது. அவர் அமெரிக்காவிலேயே ஃப்ளோரிடாவில் (Florida) கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பயனின்றி அவர் ஜூலை 4 ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். அவர் இஸ்கானின் தலைமை கமிடியின் கவர்னிங் பாடியின் ஆணயராக இருந்தார்.
கணிணி அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தனது அறிக்கையில், அமெரிக்காவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 2,793,425 -யாக உள்ளது என தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால், 129,432 பேர் இறந்துள்ளனர்.
உலகில் கொரோனா தொற்றால் மிகவும் மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும். கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் இங்கு மிக அதிகமாக உள்ளது.
பக்திசாரு சுவாமியின் மறைவிற்கு உலகெங்கிலுமிருந்து பலர் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
அவர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருந்தபோது அவருடன் எந்த சீடர்களும் இல்லாவிட்டாலும், அவர் தன்னுடன், ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை ஆகியவற்றை எடுத்துச் சென்றிருந்தார்.
Also Read: உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம் புதுப்பிப்பு