பி.சி.சி.ஐ நிர்வாகம்: லோதா குழு பரிந்துரைகள் ஏற்பு

Last Updated : Jul 18, 2016, 03:49 PM IST
பி.சி.சி.ஐ நிர்வாகம்: லோதா குழு பரிந்துரைகள் ஏற்பு title=

பி.சி.சி.ஐ நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த லோதா குழு அறிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அடுத்த ஆறு மாதத்திற்குள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட மாற்றங்களை பி.சி.சி.ஐ நிறைவேற்ற வேண்டும்.

கடந்த 2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐ.பி.எல் பிரிமியர் தொடரில் சூதாட்டம் வெடித்தது. இதுகுறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, அசோக் பிகான், ரவீந்தரன் அடங்கிய மூவர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு, இந்திய கிரிக்கெட் போர்ட் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த 159 பக்கங்கள் கொண்ட தனது பரிந்துரையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை பி.சி.சி.ஐ. மற்றும் சில மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்க மறுத்தன. 

இதனை எதிர்த்து பி.சி.சி.ஐ. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதன்மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் லோதா குழு பரிந்துரைகளை ஏற்றுக் கொள்கிறது. இதில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை அடுத்த ஆறு மாதத்திற்குள் செயல்படுத்த வேண்டும் என  தெரிவித்தது.

* மாநில சங்கத்தில் இருப்பவர்கள், பி.சி.சி.ஐ., நிர்வாகத்தில் இடம் பெறக்கூடாது.

* பி.சி.சி.ஐ., தலைவர், செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 70 வயதுக்குட்பட்ட இந்தியராக இருக்க வேண்டும். அமைச்சராகவோ, அரசு அதிகாரிகளாகவோ   அல்லது பி.சி.சி.ஐ.,யில் 9 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களாக இருக்கக் கூடாது.

* ஒரு மாநிலத்தில் ஒரு கிரிக்கெட் சங்கம் மட்டுமே இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அந்த ஒரு சங்கத்திற்கு மட்டும், தேர்தலில் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் போன்ற முக்கிய     கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது

Trending News