தனியார் டிவி சேனல்களுக்கு தடை - எல்.முருகன் விளக்கம்

தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் தனியார் டிவி சேனல்களுக்கு தடை விதிப்பது தொடர்பாக மக்களவையில் மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் விளக்கமளித்துள்ளார்.

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 16, 2022, 01:45 PM IST
  • ’தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் டிவி சேனல்கள்’
  • ஒளிபரப்பு உரிமம் ரத்து தொடர்பாக எல்.முருகன் விளக்கம்
  • மக்களவையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு
தனியார் டிவி சேனல்களுக்கு தடை - எல்.முருகன் விளக்கம் title=

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் விதமான உள்ளடக்கத்தை ஒளிபரப்பும் தனியார் டிவி சேனல்களின் ஒளிபரப்பு உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்துவருகிறது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பதில் அளித்தார். அதில் புதிய ஒளிபரப்பு உரிமம் கோரியும், பழைய உரிமத்தை புதுப்பிக்க வேண்டியும் வரும் தனியார், டிவி நிறுவனத்தின் விண்ணப்பங்களை மத்திய உள்துறை தீவிரமாகப் பரிசோதிக்கிறது என்றும் விண்ணப்பித்துள்ள, டிவி சேனல்களின் நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகத் தெரியவந்தால், பாதுகாப்பு அனுமதியை உள்துறை அமைச்சகம் நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அணு குண்டு அச்சம்; பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகள் வாங்க மக்கள் அலைமோதுவது ஏன்

இதையடுத்து சம்பந்தப்பட்ட டிவி சேனலுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட உரிமம் தன்னிச்சையாக ரத்தாகிறது. மேலும் டிவி சேனல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பப்படுகிறது என்றும் எல்.முருகன் தெரிவித்தார். இதனையடுத்து விளக்கம் அளிக்கும் டிவி நிறுவங்கனங்களில் திருப்திகரமாக இல்லாதபோது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார். கேரளாவைச் சேர்ந்த மீடியா ஒன் என்ற மலையாள செய்தி சேனல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகக் கூறி, அதன் ஒளிபரப்புக்கு ஜனவரியில் மத்திய அரசு தடை விதித்தது. கேரளா உயர்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்ய, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் மத்திய அரசு விதித்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இந்தியாவிற்கு 20-25% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கும் ரஷ்யா..!!

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News