அரசு திட்டங்களை பெற மாவைக் கொண்டு குழந்தை செய்து தம்பதி நாடகம்!

மாவை குழந்தை போல் வடிவமைத்து, மருத்துவமனைக்கு கொண்டு வந்து அரசின் நலத்திட்ட உதவியில் நிதி பெற வந்த தம்பதி!!

Last Updated : Aug 24, 2019, 02:26 PM IST
அரசு திட்டங்களை பெற மாவைக் கொண்டு குழந்தை செய்து தம்பதி நாடகம்! title=

மாவை குழந்தை போல் வடிவமைத்து, மருத்துவமனைக்கு கொண்டு வந்து அரசின் நலத்திட்ட உதவியில் நிதி பெற வந்த தம்பதி!!

ஷர்மிக் சேவா பிரசுதி சஹயடா யோஜ்னா (Shramik Seva Prasuti Sahayata Yojna) திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மருத்துவமனை போன்ற இடத்தில் பிரசவிக்கும் பெண்ணின் ஆரோக்கிய உணவுக்காக ஆயிரத்து 400 ரூபாயும், அவர் 3 மாதம் பணிக்கு செல்ல முடியாது என்பதால் அதற்கு ஈடாக 16 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள கைலராஸ் என்ற கிராமத்தில் சமூக சுகாதார நல மையத்துக்கு ஆம்புலன்சில் அவசரமாக வந்த தம்பதி, தன் குழந்தை இறந்தே பிறந்ததாகவும், தன் பெயரை மருத்துவமனையில் பதிவிடுமாறும், தான் அரசின் நலத்திட்ட நிதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் செவிலியரிடம் கூறியுள்ளார்.

குழந்தை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என மருத்துவர் பார்க்க வேண்டும் என செவிலியர் கேட்டபோது, குழந்தையைத் தராமல் அந்த தம்பதியினர் தகராறு செய்தனர். பின் கையில் இருந்ததை மருத்துவரே வந்து வாங்கிப் பார்த்த போது, அது துணியால் சுற்றப்பட்ட சிவப்பு நிற மாவு என்றும், குழந்தை போல் வடிவமைத்து வந்து அரசு நிதியைப் பெற தம்பதி செய்த மோசடி வேலை என்றும் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தார். பின் தங்கள் பணிக்கு இடையூறு ஏற்படக்கூடாது எனக் கருதி தப்பியோடிய தம்பதி குறித்து புகாரெதுவும் வழங்கவில்லை என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

 

Trending News