கான்பூர் Axis வங்கி ATM ஒன்றில், கள்ளநோட்டுக்கள் வினியோகம் ஆனதால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்!
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில், Axis வங்கி ATM ஒன்றில் பணம் எடுக்க வாடிக்கையாளர் ஒருவர் முயற்சிக்கையில் அவருக்கு ரூ.500 நோட்டு கிடைத்துள்ளது.
கிடைக்கப்பெற்ற நோட்டில் Children Bank of India என பதியப்பட்டிருந்ததால், பணத்தினை எடுத்தரவர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் பெயர் சச்சின் என அளையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ரூ. 10000 எடுப்பதற்காக ATM வந்ததாகவும், பணத்தினை எடுக்கையில் அவருக்கு இந்த கள்ள நோட்டு இணைந்து வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ATM காவளரிடம் அவர் உடனடியாக புகார் அளித்துள்ளார். விரைவில் அவருக்கு நோட்டு மாற்றி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். எனினும் அவருக்கு மாற்றியளிக்கப் படாததால் காவல் நிலையத்தினை சச்சின் அனுகியுள்ளார்.
Kanpur: An Axis Bank ATM located in Marble Market dispensed fake currency notes with 'Children Bank of India' printed on them. pic.twitter.com/fu7D2QbZtB
— ANI UP (@ANINewsUP) February 11, 2018
விசாரணையில் அந்த ATM-ல் 100000-லிருந்து, 20000 வரை பணம் எடுக்கும் நபர்களுக்கு ஒரு கள்ள நோட்டு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த ATM-னை காவல்துறையினர் மூடியுள்ளனர்.