J&K சட்டப்பேரவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை!!

ஜம்முகாஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று முக்கிய ஆலோசனை!!

Last Updated : Mar 12, 2019, 10:02 AM IST
J&K சட்டப்பேரவைத் தேர்தல்:  தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை!! title=

ஜம்முகாஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று முக்கிய ஆலோசனை!!

நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 11 தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஜம்மு-கஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 23, ஏப்ரல் 29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என ஆணையம் அறிவித்துள்ளது. 

பாதுகாப்புக் காரணங்களுக்காக இவ்வாறு தேர்தல் நடத்தப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அதனை தற்சமயம் நிறுத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் (தேர்தல் ஆணையம்) ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலை கண்காணிக்க மூன்று "சிறப்பு வாய்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை தேர்தல் ஆணையர் சுனில் அரோர அறிவித்தார். 

இந்நிலையில், காஷ்மீருக்கு கூடுதலாக அனுப்ப மத்தியப் படை தற்போது கைவசம் இல்லை என்றும், வேட்பாளர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களையும் அவர் சுட்டிக் காட்டினார். தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

2014 ஆம் ஆண்டு வெள்ள சேதம் ஏற்பட்டபோதுகூட உரிய நேரத்தில் தேர்தல் நடந்ததாக உமர்அப்துல்லா கூறியிருந்தார். இந்நிலையில், காஷ்மீர் சட்டசபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை குறித்து தேர்தல் ஆணையம் இன்று விவாதிக்க உள்ளது.

 

Trending News