அசாமில் வெளியானது இறுதி குடி உரிமை வரைவு!

அசாம் நாட்டில் இறுதி குடியுரிமை வரைவு தேசிய பதிவு (NRC) வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 30, 2018, 12:05 PM IST
அசாமில் வெளியானது இறுதி குடி உரிமை வரைவு!  title=

அசாம் நாட்டில் இறுதி குடியுரிமை வரைவு தேசிய பதிவு (NRC) வரைவு அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. 

முதல் குடியுரிமை வெளியிடப்பட்டு 7 மாதங்கள் கழித்து இந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இறுதி குடியுரிமை வெளியிடப்பட்டு இருப்பதால் மாநில முழுவதும் பாதுகாப்பு படைகள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன. மேலும் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. 

1.9 கோடி பேரின் பெயர் முதல் வரைவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது வரைவின் அடிப்படையில் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர்களின் கருத்து கேட்டறியப்படும் என்று அரசு தரப்பு அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். 

இரண்டாவது வரைவு வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாநில முதல்வர் சர்பானந்த் சோனாவால், ‘முதல் வரைவு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி வெளயிடப்பட்டது. மேலும் தற்போது இறுதிப் பட்டியலின் போது அமைதியான சூழலை காக்க வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன்’ என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

இன்று வெளியிடப்படும்  குடிமக்கள் இறுதி தேசிய பதிவு வரைவு அறிக்கையை தொடர்ந்து பாதுகாப்புக்காக நேற்று அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. பெயர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என்றால் மக்கள் கவலைப்பட தேவையில்லை. மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது. அவர்கள் தங்கள் கோரிக்கையை தெரிவிக்கலாம். என முதல் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

Trending News