தனது பாடல் மூலம் பெற்ற ஓட்டுகளை திருப்பிக் கொடுக்குமாறு பா.ஜ.க.வை கேட்ட அசாம் பாடகர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்!
அசாம் பாடகரான ஜுபீன் கார்க் (Zubeen Garg), 2016 ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது பாஜகவை ஆதரித்து பாடல் பாடினார். தற்போது குடிமக்கள் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அவர் பாடல் பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் பாரத ரத்னா விருதுகளை அவமதிக்கும் வகையில் பாடல் வரிகள் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல், 2016 தேர்தலில் தனது பாடல் மூலம் பெற்ற வாக்குகளை திருப்பிக் கொடுக்கும் படியும் அம்மாநில பாஜகவை ஜுபீன் கார்க் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.