புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி (Delhi) வன்முறை சம்பவங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளார். டெல்லியில் அமைதியின்மைக்கு காங்கிரஸ் (Congress) தலைமையிலான கும்பல் தான் காரணம் என்று அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் அமைதியின்மைக்கு காரணமான காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான வன்முறை கும்பலை தண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அமித் ஷா கூறினார். டெல்லி மக்கள் அவர்களை தண்டிக்க வேண்டும். "குடியுரிமை திருத்தச் சட்டத்தில் டெல்லி மக்களை தவறாக வழிநடத்தியதன் மூலம் எதிர்க்கட்சிகள் டெல்லியின் அமைதியைக் குலைத்துள்ளன" என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்திற்குள் விவாதிக்கப்பட்டது, அப்பொழுது யாரும் எதுவும் பேசத் தயாராக இல்லை. மற்ற விசியங்களை மட்டும் தான் அவர்கள் பேசினார்கள். என்று அமித் ஷா கூறினார். நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்தவுடனேயே, CAA சட்டம் எதிரானது எனக்கூறி டெல்லியைத் தொந்தரவு செய்தார்கள்.
டெல்லியில் CAA -க்கு எதிராக பல இடங்களில் வன்முறை நடந்தது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், சீலாம்பூர் மற்றும் டெல்லி கேட் ஆகிய இடங்களில் வன்முறை வெடித்தது.
Home Minister Amit Shah: Congress party ke netritva me tukde-tukde gang jo Dilli ke ashanti ke liye zimmedar hai, isko dand dene ka samay aa gya hai. Dilli ki janata ne dand dena chahiye. (2/2) https://t.co/fIw1D1dixB
— ANI (@ANI) December 26, 2019
மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆம் ஆத்மி அரசு மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் குறிவைத்து பேசினார். அதாவது, "பிரதம மந்திரி அவாஸ் யோஜனாவின் நன்மையை ஏழை மக்களுக்கு கெஜ்ரிவால் கொண்டுசேர விடவில்லை. ஏனெனில் அந்த திட்டத்தில் பிரதமரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் வளர்ச்சிக்கு இன்று மிகப்பெரிய தடையாக இருப்பதை குறித்து நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். மோடி ஜி, ஹர்தீப் ஜி வேகமாக செயல்பட விரும்புகிறார். ஆனால் இந்த ஆம் ஆத்மி அரசாங்கம் ஒரு பெரிய தடையாக உள்ளது. ஒவ்வொரு அபிவிருத்திப் பணிகளிலும் கெஜ்ரிவால் அரசு தடையாக இருக்கிறது.
அமித் ஷா மேலும் கூறுகையில், "கெஜ்ரிவால் முதலமைச்சராகி சுமார் 60 மாதங்கள் ஆகிவிட்டன. இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஏன் இன்று நிறைவேற்றவில்லை. இப்போது கூட இந்த வாக்குறுதிகள் நிறைவேறப் போவதில்லை. விளம்பரத்தால் மட்டுமே அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் ஆட்சியில் எதிர்ப்பு மற்றும் மறியல் வேலைகளை மட்டுமே செய்துள்ளனர் எனக் கடுமையாக ஆம் ஆத்மி அரசை தாக்கி பேசினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோடியும் புதிய குடியுரிமைச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் பரவலான எதிர்ப்புகளுக்கு குற்றம் சாட்டியிருந்தார்.
"காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் - சில நகர்ப்புற நக்சல்களும் - அனைத்து முஸ்லிம்களும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று வதந்திகளை பரப்புகிறார்கள். நாட்டல் உள்ள முஸ்லிம்களை யாரும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பமாட்டார்கள் மற்றும் இந்தியாவில் எந்த தடுப்புக்காவல் மையங்களும் இல்லை. டெல்லியில் சட்டசபை தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்துக்கான மெகா பேரணியில் இதை பிரதமர் மோடி கூறினார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.