லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் முஸ்லிம் பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு! NO சொன்ன உயர் நீதிமன்றம்!

Live In Relationship : இஸ்லாமிய பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்க மறுத்த நீதிமன்றம்... லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விவகாரம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 2, 2024, 02:25 PM IST
  • இஸ்லாமிய பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு
  • லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விவகாரம்...
  • பாதுகாப்பு கொடுக்க மறுத்த உயர் நீதிமன்றம்
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் முஸ்லிம் பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு! NO சொன்ன உயர் நீதிமன்றம்! title=

இந்து ஆண் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்த இஸ்லாமிய பெண், தனது குடும்பத்திடம் இருந்து உயிருக்கு ஆபத்து இருப்பதால் சட்டபூர்வ பாதுகாப்பு கோரியிருந்தார். இந்த மனுவில் முதல் மனுதாரராக முஸ்லிம் பெண்ணும், இரண்டாவது மனுதாரராக, அவருடன் சேர்ந்து வாழும் பெண்ணும் இருந்தனர்.

பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் தங்களது அமைதியான வாழ்க்கை உறவில் தலையிடுவதாக மனுதாரர்கள் கூறியிருந்தனர். லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் திருமணமான முஸ்லிம் பெண்ணுக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

முதல் மனுதாரர் இரண்டாவது மனுதாரருடன் முஸ்லீம் சட்டத்தின் ((Shariat) ஷரியத்) விதிகளுக்கு முரணாக வாழ்ந்து வருகிறார் என்று கூறிய நீதிமன்றம், சட்டப்பூர்வமாக திருமணமான மனைவி திருமணத்திற்கு வெளியே செல்ல முடியாது மற்றும் முஸ்லீம் பெண்களின் இந்த செயல் 'ஜினா' (Zina (fornication)(விபச்சாரம்)) மற்றும் 'ஹராம்' (Haram' (an act forbidden by Allah)) அல்லாவால் தடுக்கப்பட்ட செயல் என்று கூறிவிட்டது.

மேலும் படிக்க | மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை? நாடாளுமன்றத்தில் களமிறக்கத் தயாராகும் பாஜக மாநில தலைவர்

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு, திருமணமான முஸ்லிம் பெண் தனது கணவருடன் முடியாமல் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அது தொடர்பாக எந்தவித சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியது.

முஸ்லிம் பெண்ணின் கணவர், இரண்டாவது திருமணத்தை செய்து கொண்டதால், பெண் தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால் அங்கும் அவருக்கு பிரச்சனைகள் இருக்கவே, அவர் இந்து ஆண் ஒருவருடன் சேர்ந்து ஒன்றாக வாழ்கிறார். 

தற்போது தங்கள் இருவருக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தில், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் இருந்து பாதுகாப்பு தேவை என்று மனுதாரர்கள் இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் படிக்க | தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு! அரசியல் கட்சிகளுக்கே ஆப்பு வைக்கும் பொதுமக்கள்!

இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் ஷரியத்தை காரணம் காட்டி, மனுதாரர்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க மறத்து விட்டது. சட்டபூர்வமாக விவாகரத்து வாங்காத திருமணமான முஸ்லிம் பெண் இன்னொருவருடன் வாழ்வதற்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்றும், இஸ்லாமிய சட்டங்களின்படி விவாகரத்து செய்யாமல் மற்றொருவருடன் சேர்ந்து வாழ்வது தவறாக கருதப்படுவதாகவும் அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பாதுகாப்பு கொரிய பெண்ணின் மனுவை நிராகரித்த நீதிபதி ரேணு அகர்வால் அடங்கி அமர்வு பெண்ணின் குற்ற செயலுக்கு நீதிமன்றம் துணை போக முடியாது என்று கூறிவிட்டார் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மதமாற்றத்திற்காக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் எந்த விண்ணப்பமும் கொடுக்கவில்லை என்றும் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறவில்லை என்பதாலும் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டது.

இந்த வழக்கின் விசாரணையின் போது பெண் சமர்ப்பித்த சமர்ப்பித்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறிய வழக்குறீங்க பெண் தனது கணவனை விட்டு வெளியேறி மனுதாரர் தான ஹிந்து நான் உடன் வசிப்பது தவறானது இந்த பாதுகாப்புக்கு வரும் பெண்ணுக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு கொடுக்கக் கூடாது என்று வாதாடினார்.

மேலும் படிக்க | இந்தியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும் - ஆர் எஸ் பாரதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News