கர்நாடகா: அனைத்து பெண்கள் ஏர் இந்தியா பைலட் குழு உலகின் மிக நீளமான விமானப் பாதையில் வட துருவத்தின் மீது பறந்து சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விமானப் பயணம் சுமார் 16,000 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது.
"இப்படிப்பட்ட ஒரு பயணம் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படாததால், இது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த பயணத்தை முடிக்க சுமார் 17 மணிநேரம் ஆனது" என்று சான் பிரான்சிஸ்கோ-பெங்களூரு இடையிலான ஏர் இந்தியாவின் (Air India) முதல் விமானத்தை இயக்கிய நான்கு விமானிகளில் ஒருவரான சிவானி மன்ஹாஸ் ஏ.என்.ஐ-யிடம் தெரிவித்தார்.
"இன்று, வட துருவத்தின் மீது பறந்து சாதனை படைத்தது மட்டுமல்லாமல், அனைத்து பெண்கள் விமானிகள் குழுவாக இருந்து இந்த சாதனையை வெற்றிகரமாக செய்துள்ளது பெருமை அளிக்கின்றது. இந்த சாதனையில் பங்கு வகிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம். இந்த பாதையில் பயணம் மேற்கொண்டதால் சுமார் 10 டன் எரிபொருளை மிச்சப்படுத்த முடிந்தது” என்று கேப்டன் ஜோயா அகர்வால் பெங்களூரு (Bengaluru) விமான நிலையத்தில் ANI இடம் கூறினார்.
ஏர் இந்தியாவின் அனைத்து மகளிர் பைலட் குழு சான் ஃபிரான்சிகோவிலிருந்து (San Francisco) (எஸ்.எஃப்.ஓ) இலிருந்து தங்கள் விமானத்தைத் தொடங்கி ஜனவரி 11 ஆம் தேதி பெங்களூரை அடைந்தது. இந்த பயணம் சுமார் 16,000 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியது.
வட துருவத்தின் (North Pole) மீது பறப்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சவால் நிறைந்த ஒரு விஷயம் என்றும், இதற்கு அதிக திறனும் அனுபவமும் தேவை என்றும் விமான வல்லுநர்கள் நம்புகின்றனர். இந்த விமாத்திற்கு தலைமை வகித்த கேப்டன் சோயாவுக்கு 8,000 க்கும் மேற்பட்ட பறக்கும் மணி நேர அனுபவம் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் போயிங் -777 விமானத்தை ஓட்டிய இள வயது பெண் விமானி என்ற சாதனையை அவர் செய்தார். வட துருவம் வழியாக அவர் மேற்கொண்ட இந்த பயணம் அவரது சாதனைகளில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும்.
"2013 ஆம் ஆண்டில் போயிங் -777 விமானத்தை ஓட்டிய இள வயது பெண் விமானி (Pilot) என்ற பெருமை எனக்கு கிடைத்தது. பெண்கள் சமூக அழுத்தத்தை எதிர்கொண்டாலும் அவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும். எந்தவொரு பணியையும் சாத்தியமற்றது என்று அவர்கள் கருதக் கூடாது” என்று அவர் முன்பு ANI-யிடம் கூறியிருந்தார்.
ALSO READ: Covid பயத்தால் மொத்த டிக்கெடையும் வாங்கி ஒத்தையா விமானத்தில் பயணித்த கோடீஸ்வரர்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR