ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் இந்தியத் துணை ராணுவப்படை மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த 14 ஆம் தேதி நடத்தியத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் செயல்பட்ட வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டன. முக்கிய தீவரவாதிகளும் பலியாகினர்.
இந்த நிலையில், இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் குறித்து ஆலோசனை செய்ய இன்று மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்.
அதன்படி மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. பின்னர் ஏஎன்ஐ செய்தி ஊடகத்திடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், இந்திய விமானப்படை மூலம் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தேன். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உட்பட மற்ற முக்கிய அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.
எனக்கு மிகவும் மகிழ்ச்சி, ஏனென்றால் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இந்திய விமானப்படைக்கு வாழ்த்து கூறினார்கள். பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைக்கும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். எந்தவித விவாதமும் செய்யாமல் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளித்தனர் என்று கூறினார்.