தோஹாவில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.
விமானம் தரையிறங்குவதற்காக ஓடுபாதையில் இறங்கிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையில் வேகமாக சென்று மின் கம்பம் ஒன்றின் மீது மோதியது. இதில் விமானத்தின் இறக்கை சேதமடைந்தது.
இருப்பினும் உடனே எச்சரிக்கையுடன் துரிதமாக செயல்பட்ட விமானி விமானத்தை மேலும் முன்னேறி செல்லாமல் நிறுத்தினார்.
இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகளும் விமான பணியாளர்களும் பாதுகாப்பாக உயிர் தப்பினர். விமானம் ஓடுபாதையை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதிய சம்பவம் விஜயவாடா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலையத்தின் இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Andhra Pradesh: An Air India Express flight hits an electric pole while landing at Vijayawada International Airport in Gannavaram. "All 64 passengers on board the flight and the crew are safe," says airport director G Madhusudan Rao. pic.twitter.com/yFaLMWlXHE
— ANI (@ANI) February 20, 2021
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நேற்று ஷார்ஜாவில் இருந்து கோழிக்கோட்டிற்கு 112 பயணிகளுடன் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில் விஜயவாடா விமான நிலையத்தில் மின்கம்பத்தில் மோதிய சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | அரசு ஊழியர்கள் மின்- வாகனத்தை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்: Nitin Gadkari
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR