சபரிமலை விவகாரம் குறித்து ஷிர்டிக்கு வரும் பிரதமர் மோடியிடம் நேரில் முறையிட முயன்ற பெண்ணியவாதி திருப்தி தேசாய் புனேயில் போலீசாரால் கைது...
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது உலக புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலில் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாய்பாபா மகா சமாதி நிறைவு தினமான இன்று சிறப்பு பூஜைகள், தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இந்த நிறைவு நாள் பூஜையில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஷீரடி செல்கிறார்.
அதைத்தொடர்ந்து, பக்தர்கள் வசதிக்காக ஷீரடியில் புதிதாக கட்டப்படவுள்ள மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, அங்கு நடக்கவுள்ள நிகழ்ச்சியில் சாய்பாபா உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை வெளியிடுகிறார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக ஷிர்டிக்கு வரும் பிரதமர் மோடியிடம் நேரில் முறையிட முயன்ற பெண்ணியவாதி திருப்தி தேசாய் புனேயில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது பெண் போலீசாருக்கும் திருப்தி தேசாயின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Police force was already here today morning when we were about to leave for Shirdi. It is wrong. It is our Constitutional right to protest. We are being stopped at home only. It is an attempt to suppress our voice through Modi ji: Activist Trupti Desai on being detained by police pic.twitter.com/n8NJXBhqGR
— ANI (@ANI) October 19, 2018
மகாராஷ்ட்ராவில் உள்ள சிங்கனாபுர் சனிபகவான் கோவிலில் பெண்களை அனுமதிக்க மறுத்தபோது தமது ஆதரவாளர்களுடன் சென்று கோவில் கருவறை புகும் போராட்டம் நடத்தியவர் திருப்தி தேசாய். சபரிமலை அய்யப்பன் கோவிலிலும் பெண்களை அனுமதிக்க கோரி அவர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார்.