மும்பை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து! 2 தீயணைப்பு வீரர்கள் காயம்!

மும்பை போர்ட் பகுதியில் பட்டேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது!

Last Updated : Jun 9, 2018, 11:47 AM IST
மும்பை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து! 2 தீயணைப்பு வீரர்கள் காயம்! title=

மும்பை போர்ட் பகுதியில் பட்டேல் சேம்பர்ஸ் கட்டிடத்தில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு எரிந்த தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். இந்த விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். 

இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தகவலறிந்ததும் 16 தீயணைப்பு இயந்திரங்கள், 11 வாகனங்கள் மற்றும் 150 தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தோம். இந்த தீ விபத்தில், இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர். தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து விசாரணைக்கு பிறகே தெரியும் என்று தகவல் தெரிவித்தனர். 

மேலும், மும்பை ஃபோர்ட் பகுதியில், கடந்த 10 தினங்களில் ஏற்படும் 2-வது விபத்து இதுவாகும். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, மும்பை சிண்டியா பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

Trending News