பேருந்து நிலையத்தில் 8 மாத குழந்தை திருட்டு; CCTV-ல் காட்சி பதிவு: வீடியோ

சாலைகளில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் சோதனை செய்தபோது, குழந்தையை திருடி சென்றவர்களின் அடையாளம் தெரிந்தது. அவர்கள மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 9, 2019, 01:07 PM IST
பேருந்து நிலையத்தில் 8 மாத குழந்தை திருட்டு; CCTV-ல் காட்சி பதிவு: வீடியோ title=

மொராதாபாத்: மொராதாபாத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து 8 மாத குழந்தை திருடப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கால்ஷாகித் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ரோட்வேஸ் பஸ் தளத்தில் நடைபெற்று உள்ளது. ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து சாலையோரத்தில் வசித்த பெண்ணின் குழந்தையைத் திருடிச் சென்றுள்ளனர். குழந்தையை பறிகொடுத்த தாய் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா மூலம் முழு சம்பவத்தையும் போலீசார் பார்த்துள்ளனர். அந்த காட்சியை பார்த்த போலீசார் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ​​குழந்தையை திருடியவர்களை அடையாளம் காணப்பட்டது. ஆனால் அவர்களை இதுவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை.

மேனதர் மாவட்டத்தில் உள்ள பிகான்பூர் நகாரியா என்ற கிராமத்தில் வசிக்கும் ராணி தனது கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோபமடைந்த ராணி, தனது 8 மாத மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி ரயில் நிலையம் மற்றும் சாலைகளில் தங்கியுள்ளார்.

நேற்றிரவு ஒரு இளைஞனும் பெண்ணும் அவரிடம் வந்ததாகவும், ராணியிடம் மிகவும் அன்பாக பேசியுள்ளனர். மேலும் ராணிக்கு ஏற்பட்ட தகராறு குறித்து அவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணும் ஆணும் ராணிக்கு உதவி செய்வது போல நட்பு ஏற்படுத்துக் கொண்டனர். பிறகு ராணியின் மகனை தன் மடியில் அமர்த்திக்கொண்டு அந்த பெண்ணும் ஆணும் உணவளிக்க ஆரம்பித்துள்ளன.

 

அதன்பின்னர் 8 மாத குழந்தைக்கு தாகம் எடுத்துள்ளது. இருவரும் அருகில் இருக்கும் குழாய் மூலம் குடிநீர் கொடுப்பதாகக் கூறி தங்களுடன் குழந்தையை அழைத்துச் சென்றள்ளனர். பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை. ராணி உடனடியாக தனது மகனை குறித்து போலீசில் புகார் செய்துள்ளார். தகவல் கிடைத்ததும், கால்ஷீத் காவல் நிலையத் தலைவர் தினேஷ்குமார் சர்மா போலீஸ் குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்து, அந்தப் பெண்ணின் குழந்தையைத் தேடத் தொடங்கினார்கள். சாலைகளில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் சோதனை செய்தபோது, குழந்தையை திருடி சென்றவர்களின் அடையாளம் தெரிந்தது. அவர்கள மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Trending News