7th Pay Commission: ஜூலை 1 முதல், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DR 28 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கப்பட்டது. மத்திய அரசு அகவிலைப்படியை 17% லிருந்து 28% ஆக உயர்த்தியுள்ளது. இப்போது மற்றொரு நல்ல செய்தி என்னவென்றால் பண்டிகை காலத்தில் 3% என்ற அளவிற்கு அகவிலைப்படி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மொத்த அகவிலைப்படி 31%ஆக இருக்கும்.
அகவிலைப்படி 3% அதிகரிக்கும்
மத்திய அரசு பணியாளர்கள் பணவீக்கத்திலிருந்து ஓரளவு நிவாரணம் பெற, அரசு விரைவில் 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்க வேண்டும் என்று ஊழியர் சங்கம் கோருகிறது. AICPI குறியீட்டின் தரவு வெளியாகியுள்ள நிலையில், அதன் குறியீடு 121.7 என்ற அளவை எட்டியுள்ளது
அகவிலைப்படி 31% ஆக இருக்கும்
2021 ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படி, (Dearness Allowance - DA) செப்டம்பர் நடுப்பகுதியில் அறிவிக்கப்படலாம் என்று மதிப்பிடப்படுகிறது. அதே நேரத்தில், அதனை செப்டம்பர் மாத சம்பளத்துடன் பெறலாம்
ALSO READ | 7th Pay Commission: தமிழக அரசு ஊழியர்களுக்கு டி.ஏ உயர்வு எப்போது? விரைவில் பம்பர் செய்தி
சம்பளம் எந்த அளவிற்கு அதிகரிக்கும்
7வது ஊதிய குழு (7th Pay Commission) அறிவிப்பின் படி, ஜூன் மாதத்தில் அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால், மொத்த DA 31 சதவீதமாக மாறும். 7 வது ஊதியக்குழு கணக்கீட்டின் படி, மத்திய ஊழியர்களின் நிலை -1 ன் சம்பள வரம்பு ரூ.18,000 முதல் ரூ.56900 வரை இருக்கும். இப்போது அடிப்படை சம்பளமான 18,000 ரூபாயில் 28% என்ற விகிதத்தில், மாதாந்திர கொடுப்பனவு ரூ.5040 என்ற நிலையில், 31% என்ற கணக்கின் படி கொடுப்பனவு ரூ.5580 ஆக அதிகரிக்கும். அதன்படி, ஆண்டு ஊதிய உயர்வு ரூ.6480 ஆக இருக்கும்.
சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ .18,000
2. புதிய அகவிலைப்படி (31%) ரூ.5580/மாதம்
3. இதுவரை உள்ள அகவிலைப்படி (28%) ரூ.5040/மாதம்
4. அதிரித்துள்ள சம்பளத் தொகை: 5580-5040 = ரூ. 540/மாதம்
5. ஆண்டு சம்பள உயர்வு 540X12 = ரூ 6480 அதிகரிப்பு
அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
இப்போது இந்த கணக்கீடு நிலை -1 இன் அதிகபட்ச அடிப்படை சம்பளமான ரூ.56900 க்கு எவ்வளவு அதிகரிக்கும் என பார்க்கலாம்
31% DA கணக்கீடு
1. ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ 56900
2. புதிய அகவிலைப்படி (31%) ரூ.17639/மாதம்
3. இதுவரை பெற்ற அகவிலைப்படி (28%) ரூ.15932
4. அதிரித்துள்ள சம்பளத் தொகை: 17639-15932 = ரூ 1707/மாதம்
5. ஆண்டு சம்பள உயர்வு 1707X12 = ரூ.20484 அதிகரித்துள்ளது.
அதாவது, ஆண்டு ஊதிய உயர்வு ரூ. 20484 ஆக இருக்கும். எனினும், இதில் HRA சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | 7th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அதிகரிக்கிறதா? அரசு கூறுவது என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR