75th Independence Day: இன்று நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த நிகழ்வின் போது முதல் முறையாக இந்திய விமான படைக்குச் சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் பூக்களை தூவின.
நாட்டில் சுதந்திர தினம் (Independence Day) கொண்டாடப்படுவதை அடுத்து தலைநகர் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர், ராணுவம், தேசிய பாதுகாப்பு படையின் ஸ்னைப்பர் பிரிவு, ஸ்வாட் கமாண்டோக்கள் உள்ளிட்ட சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Delhi | Prime Minister Narendra Modi inspects the guard of honour at Red Fort pic.twitter.com/Y2tMYsFQ62
— ANI (@ANI) August 15, 2021
ALSO READ | 75வது சுதந்திர தினம்- தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
முன்னதாக, ராஜ்காட் வந்த அவர் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) இன்று (வியாழக்கிழமை) காலை ட்வீட் செய்து சுதந்திர தினத்தன்று அனைத்து குடிமக்களுக்கும் வாழ்த்து கூறினார்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடியரசு தினத்தன்றும் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வுகளுக்கு நிறைய பேரை அழைக்கவில்லை. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் வென்ற 32 வீரர்கள், இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த இரு அதிகாரிகள் மட்டும் இன்றைய சுதந்திர தின நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர், மூவர்ண கொடியை அவர் ஏற்றி வைத்தார். பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்ததும், விமானப்படையை சேர்ந்த இரண்டு Mi-17 ரக விமானங்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Prime Minister Narendra Modi hoists the National Flag from the ramparts of Red Fort to celebrate the 75th Independence Day pic.twitter.com/0c3tZ6HQ3X
— ANI (@ANI) August 15, 2021
ALSO READ | Independence Day 2021: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR