ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 575 இளைஞர்கள் சனிக்கிழமை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். புதிதாக சேர்க்கப்பட்ட வீரர்கள் ஜம்மு-காஷ்மீர் லைட் காலாட்படைக்கான பாஸிங் அவுட் அணிவகுப்பில் சேர்க்கப்பட்டனர்.
Zee செய்திகள் உடன் பேசிய புதிய ராணுவத்தினர் தெரிவிக்கையில்., தாய்நாட்டிற்கு சேவை செய்யத் தயாராக இருப்பதாகவும், கடமையில் தங்கள் உயிரைத் தியாகம் செய்வதிலிருந்து கூட விலக மாட்டார்கள் என்றும் கூறினார். அவர்கள் தற்போது இந்திய இராணுவத்தின் ஒரு அங்கமாக இருப்பதற்கும் பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்தனர்.
இந்திய இராணுவத்தின் புதிய வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் Zee செய்திகள் உடன் பேசுகளையில், இது அவர்களுக்கு பெருமை அளிக்கும் விஷயம் என்று குறிப்பிட்டனர்.
லெப்டினென்ட் ஜெனரல் அஸ்வினிகுமார் Zee செய்திகள் குழுவிடம் தெரிவிக்கையில்., பிராந்தியத்தில் பல ஆட்சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்., மேலும் இது ஜம்மு-காஷ்மீரின் முகம் மாறும் அறிகுறியாகும், "வாழ்க்கையில் முன்னேற விரும்பும் அனைவருடனும் இந்திய இராணுவம் துணை நிற்கிறது," என்றும் தெரிவித்தார்.
ஊடுருவல்களைச் சரிபார்க்கும் முயற்சியில் ஜம்மு-காஷ்மீர் லைட் காலாட்படை 1947-இல் நடைமுறைக்கு வந்தது.
ஜம்மு-காஷ்மீர் ஒரு மாற்றத்திற்கு உள்ளாகி வரும் நேரத்தில், பிராந்தியத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பது நிகழ்ந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறைக்கான சில அறிக்கைகள் வந்திருந்தாலும், உள்துறை அமைச்சகம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
சில இடையூறு சம்பவங்களைத் தவிர, இப்பகுதி அமைதியானது என்றும் பெரிய அளவில் எதிர்ப்புக்கள் எதுவும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இருந்தபோதிலும், பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்கள் லஷ்கர்-இ-தைபா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை இப்பகுதியில் நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றன. அதுதொடர்பான அவர்கள் ஒரு கடிதத்தையும் வெளியிட்டனர். அதில் மக்கள் தங்கள் கடைகளைத் திறக்கவோ அல்லது வீடுகளை விட்டு வெளியேறவோ கூடாது என்று எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.