Maharashtra News In Tamil: மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவிலி பகுதியில் ரசாயன நிறுவனம் ஒன்றின் கொதிகலனில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. வெடி விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. மீட்புப் பணி முடிந்ததும் அது குறித்து ஆராயப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து அதிகாரிகளின் கூற்றுப்படி, டோம்பிவிலியின் எம்ஐடிசி கட்டம்-2 பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பல தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சுவதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். காயமடைந்தவர்கள் நெப்டியூன் மருத்துவமனை மற்றும் எம்ஐடிசியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
டோம்பிவிலி கிழக்கில் உள்ள அமுதன் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மதியம் 1.30 மணியளவில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டதாக கல்யாண் டோம்பிவ்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (கேடிஎம்சி) அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெடிச்சத்தத்தின் சத்தம் 2 கிலோமீட்டர் சுற்றளவில் கேட்டது மற்றும் வெடிவிபத்து காரணமாக அருகில் இருந்த கட்டிடத்தின் வீடுகளின் கண்ணாடி உடைந்தது. இந்த வெடி விபத்துக்கு பிறகு ரசாயன ஆலைக்கு மேலே பெரிய புகை மூட்டம் போல காட்சியளித்ததாக ஒரு குடியிருப்பாளர் கூறினார்.
தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் கல்யாண்-டோம்பிவிலி முனிசிபல் கார்ப்பரேஷன் (கேடிஎம்சி) தீயணைப்பு அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், "நிறுவனத்தின் வளாகத்திற்குள் ரசாயனங்கள் இருப்பதால், அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெடி சத்தம் கேட்டு தொழிற்சாலையில் இருந்தவர்கள் சிறிது நேரத்தில் தப்பி ஓடிவிட்டனர் என நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். எங்களின் மீட்பு பணி நடந்து வருகிறது" எனக் கூறியுள்ளனர்.
மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "டோம்பிவிலி எம்ஐடிசியில் உள்ள அமுதன் கெமிக்கல் நிறுவனத்தில் கொதிகலன் வெடித்த சம்பவம் சோகமானது. இந்த சம்பவத்தில் முதலில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கலெக்டரிடம் பேசினேன், அவர்களும் 10 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்து விட்டனர். மீட்புப் பணியில் NDRF, TDRF மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
Maharashtra DCM Devendra Fadnavis tweets on Dombivli fire incident, he says, "The incident of boiler explosion at Amudan Chemical Company in Dombivli MIDC is tragic. 8 people have been suspended. Arrangements have been made to treat the injured and more ambulances have been kept… pic.twitter.com/ixCSiFBaTF
— ANI (@ANI) May 23, 2024
2016 ஆம் ஆண்டு இதேபோன்று டோம்பிவிலி எம்ஐடிசி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வெடிவிபத்து நிகழ்ந்து. அதில் 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க - காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் மனமுடைந்த காதலி விபரீத முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ