பாட்னா-வில் வன்கொடுமைக்கு 35 வயது பெண்மனி பலி!

பாட்னா மாவட்டத்தின் நொபத்புரில் 35 வயதான பெண்மணி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொள்ளப்பட்டுள்ளார். 

Last Updated : Oct 13, 2017, 12:42 PM IST
பாட்னா-வில் வன்கொடுமைக்கு 35 வயது பெண்மனி பலி! title=

பாட்னா: பாட்னா மாவட்டத்தின் நொபத்புரில் 35 வயதான பெண்மணி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொள்ளப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக 22 வயது இளைஞர் உட்பட இரண்டு ஆண்கள் குற்றம்சாட்டப் பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் சம்பவத்திற்கு முன்தினமும் அப்பெண்மனியை இவர்கள் தொந்தரவு செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது நபரை இன்னும் காவல்துறையினர் தேடி வருவதாக ANI தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த புதன்கிழமை அன்று இரவு, இருவரும் அப்பெண்மனியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர், ஆனால் அவர் கடுமையாக இவ்விருவரையும் எதித்து சன்டையிட்டுள்ளார். 

இத்தாக்குதலில் அப்பெண்மனியை ஒரு குச்சியைக் கொண்டு தாக்கியதுடன், ஒரு இரும்பு கம்பியை கொண்டும் இருவரும் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு பின்னர் அவர் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர்யிழந்தார்.

35 வயதான பாதிக்கப்பட்ட பெண்மனி நான்கு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News