கான்பூர் மழையில் இடிந்து விழந்த கட்டிடம்; வைரலாகும் Video!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம் அடிந்துள்ளனர்!

Last Updated : Jul 31, 2018, 05:02 PM IST
கான்பூர் மழையில் இடிந்து விழந்த கட்டிடம்; வைரலாகும் Video! title=

கான்பூர்: உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம் அடிந்துள்ளனர்!

உத்திர பிரதேச மாநிலத்தில் கடும் மழை பொழிந்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை படிபடியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கான்பூரில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று மழையில் இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் வீட்டின் அருகாமையில் நின்றிருந்த 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்த சம்பவத்தினை அப்பகுதியில் இருந்த மக்கள் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். 

இந்த வீடியோவில் திடீரென கட்டிடன் இடிந்து விழுவதும், விழுந்த பின்னர் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்படுவதுமாய் காட்சியளிக்கின்றது.

இதற்கு முன்னதாக கடந்த பிப்., 2018 ஆம் ஆண்டு இதேப்போன்று கட்டுமானப் பணியில் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

கான்பூரில் இதுப்போன்ற விபத்துக்கள் நடப்பது இது முதல் முறை அல்ல, மழையின் போது இதுப்போன்று நிகழ்வது வழக்கமான நிகழ்வாகவே தான் அமைந்து வருகின்றது!

Trending News