மத்திய அரசு தலித் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு சுமார் ரூ.2.5 லட்ச ரூபாய் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை 2013 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசு அமுல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் பெயர் ”அம்பேத்கர் சமூக ஒருமைப்பாட்டு கலப்புத் திருமண திட்டம்” என்பதாகும். இத்திட்டத்தில் சில வரைமுறைகளை வைத்திருந்தனர்.
இத்திருமணத்தில், ஒருவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கவேண்டும். ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கக்கூடாது. திருமணம் செய்து கொண்ட ஓராண்டிற்குள் இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கவேண்டும் என்ற நிபந்தனைகள் இருந்தன.
இதையடுத்து, தலித் கலப்பு திருமணம் செய்யும் எல்லா தம்பதிகளுக்கும் எந்த நிபந்தனைகளும் இன்றி ரூ.2.5 லட்சம் உதவி தொகை மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.