NRC இறுதிப் பட்டியல் வெளியீடு: 19 லட்சம் பேர் நீக்கம்; பல மாவட்டங்களில் 144 தடை

அசாம் மாநிலத்தின் என்.ஆர்.சி இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலில் இருந்து 19 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம் என அறிவுறுத்தல்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2019, 11:21 AM IST
NRC இறுதிப் பட்டியல் வெளியீடு: 19 லட்சம் பேர் நீக்கம்; பல மாவட்டங்களில் 144 தடை title=

புதுடெல்லி / குவாஹாட்டி: தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியலை இன்று வடகிழக்கு மாநிலமான அசாமில் வெளியிடப்பட்டுள்ளது. என்.ஆர்.சி பட்டியலில் 3.11 கோடி (3,11,21,004) பேர் இடம் பெற்றுள்ளதாக என்.ஆர்.சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா தெரிவித்துள்ளார். மேலும் 19 லட்சம் (19,06,657) பேர் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். பட்டியலில் விடுபட்ட மக்கள் சரியான சான்றுகளை வழங்கவில்லை. அவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் எனவும், வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் முறையிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த இறுதிப் பட்டியலின் கீழ் சுமார் 40 லட்சம் பேரின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட இருந்தது. இந்த பட்டியலில் யாருடைய விடுபட்டுள்ளதோ வெளிநாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறைடு செய்வதற்கான கால அவகாசத்தை 60 முதல் 120 நாட்களாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது.

அசாமில் அசம்பாவிதம் எதுவும் நடைபெறமால் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அசாமின் தலைநகர் குவஹாத்தி உட்பட மாநிலத்தின் பல முக்கிய பகுதிகளில் பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது. 

அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்க 3 கோடி 29 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில் 2 கோடி 90 லட்சம் பேர் மட்டுமே சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள 40 மில்லியன் மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் எந்தவொரு சரியான  ஆவணத்தையும் வழங்கவில்லை எனக் கூறப்பட்டது. 

மறுபுறம், பட்டியலில் பெயர் இல்லாதவர்களை சிறையில் அடைக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்களின் குடியுரிமையை நிரூபிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அஸ்ஸாம் மக்களுக்கு உறுதியளித்துள்ளது.

Trending News