உபி.-யில் 2 டெம்போ மீது கவிழ்ந்த லாரி விபத்தில் 17 பேர் பலி; சிலர் கவலைக்கிடம்

உயிரிழந்த 17 பேர்களில் 12 ஆண்கள், 3 குழந்தைகள், 2 பெண் அடங்குவர். ஐந்து பேர் பலத்த காயமடைந்துள்ளதால், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 27, 2019, 02:39 PM IST
உபி.-யில் 2 டெம்போ மீது கவிழ்ந்த லாரி விபத்தில் 17 பேர் பலி; சிலர் கவலைக்கிடம் title=

14:34 27-08-2019
ஷாஜகான்பூரில் நடந்த சோக விபத்தில் முன்னதாக 16 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது


ஷாஜகான்பூர்: ஷாஜகான்பூரில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) அன்று ஒரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நமக்கு கிடைத்த தகவல்களின்படி, இரண்டு டெம்போவின் மேல் ஒரு லாரி கவிழ்ந்தால் ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பலியாகினர் என தகவல்கள் வந்துள்ளன, மேலும் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 16 பேர்களில் 12 ஆண்கள், 3 குழந்தைகள், 1 பெண் அடங்குவர். ஐந்து பேர் பலத்த காயமடைந்துள்ளதால், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இந்த விபத்து ஷாஜகான்பூரில் ஜமுக்கா டிராஹாவில் நடந்துள்ளது. இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும், அந்த பகுதியின் காவல்துறை சம்பவ பகுதிக்கு விரைந்து லாரிகள் மற்றும் டெம்போவின் கீழ் சிக்கியவர்களை கிராம மக்களின் உதவியுடன் வெளியே எடுத்துள்ளது. அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஒரு கிரேன் உதவியுடன் டிரக்கை அகற்றி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த சாலை விபத்து செய்தியை அறிந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முழு விஷயத்தையும் கேட்டறிந்தார். மேலும் சிகிச்சை மற்றும் காயமடைந்தவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியாளர்க்கு அறிவுறுத்தி உள்ளார்.

Trending News