ஆரோக்கியமாக இருக்க பெண்களின் உணவில் இருக்க வேண்டிய சூப்பர்ஃபுட்ஸ்

Women Health: இந்த பதிவில் உங்கள் உடலை எவ்வாறு கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது என்பது பற்றியும் பிஸியான வாழ்க்கை முறையில் உங்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பது பற்றியும் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 30, 2023, 07:13 PM IST
  • முட்டையில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் உள்ளன.
  • இது உடல் வலிமைக்கு ஆதாரமாக உள்ளது.
  • முட்டையை பல வழிகளில் பயன்படுத்தி சாப்பிடலாம்.
ஆரோக்கியமாக இருக்க பெண்களின் உணவில் இருக்க வேண்டிய சூப்பர்ஃபுட்ஸ் title=

பெண்களுக்கான சூப்பர்ஃபுட்ஸ்: இன்றைய அவசர காலத்தில் அன்றாட ஓட்டங்களுக்கு மத்தியில், பெண்கள் தங்களைக் கவனித்துக் கொள்ள முடியாமல் போகிறது. ஆனால் வீட்டின் சமையலறையில் இருக்கும் சில பொருட்களை உட்கொண்டாலே, பெண்கள் தங்கள் மனநிலையையும் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் சரியாக இருப்பது மிகவும் முக்கியமாகும். இந்த பதிவில் உங்கள் உடலை எவ்வாறு கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது என்பது பற்றியும் பிஸியான வாழ்க்கை முறையில் உங்களை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பது பற்றியும் காணலாம். 

அத்திப்பழம்

அத்திப்பழங்கள் பெரோமோன் சுரப்பையும் கருவுறுதலையும் மேம்படுத்துகின்றது. இதை சாப்பிடுவதற்கு முன், பிற பழங்களை சாப்பிடுங்கள். அத்திப்பழத்தில் அதிக அளவு அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக குளிர்காலத்தில் அத்திப்பழம் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் இனிப்பான உணவு வகைகளை சாப்பிட விரும்பி, ஆனால், உடல் பருமன் அச்சம் காரணமாக அதை சாப்பிட தயங்கினால், அதற்கு பதிலாக அத்திப்பழம் சாப்பிடுவது ஒரு சிறந்த வழியாக இருக்கும்.  

ப்ரோக்கோலி

வைட்டமின் சி நிறைந்த ப்ரோக்கோலியை உங்கள் சாலட்டில் அல்லது உங்கள் வழக்கமான உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். இதை பச்சையாகவோ, அல்லது சமைத்தோ உட்கொள்ளலாம். அதிலும் முக்கியமாக, ப்ரோக்கோலி பெண்களுக்கு சிறந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. உடல் உறுப்புகளில் இரத்த ஓட்டத்திற்கு வைட்டமின் சி அவசியம். ப்ரோக்கோலியில் செய்யப்பட்ட பராந்தாவும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க | அரிசி நீருக்குள் இருக்கும் ஆயுசுக்கான மந்திரம்..! இப்படியும் பயன்படுத்தலாம்

கிராம்பு

கிராம்புகளை க்ரில்ட் மீட், புலாவ் ஆகியவற்றில் சேர்க்கலாம். அல்லது தேநீரிலும் சேர்த்து உட்கொள்ளலாம். கிராம்புகளின் சுவை சாப்பிட நன்றாக இருக்காது, ஆனால் கிராம்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது. கிராம்பு வாய் துர்நாற்றத்தை போக்க வல்லது. உணவில் சிறிது கிராம்பு பொடியை தூவி சாப்பிடலாம்.

குங்குமப்பூ

குங்குமப்பூ உங்கள் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். கொதிக்கும் பால் அல்லது தண்ணீரில் சில குங்குமப்பூ துகள்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து, குங்குமப்பூ பால் குடிக்கவும். குங்குமப்பூவின் பயன்பாடு குளிர்காலத்தில் உங்களுக்கு நன்மை பயக்கும்.

முட்டைகள்

முட்டையில் வைட்டமின் பி5 மற்றும் பி6 நிறைந்துள்ளது. முட்டை சாப்பிடுவது ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருப்பதுடன் மன அழுத்தத்தையும் குறைக்கிறது. முட்டையில் கலோரிகள் குறைவாகவும், புரதச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடல் வலிமைக்கு ஆதாரமாக உள்ளது. முட்டையை பல வழிகளில் பயன்படுத்தி சாப்பிடலாம். ரொட்டி ஆம்லெட் அல்லது முட்டை பராத்தா காலை உணவுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வறுத்த ஆளி விதையை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News