Women Health Care Tips: ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான உணவு மிக அவசியமாகும். அதுமட்டுமின்றி வாழ்க்கை முறையும் நேர்த்தியானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக பலவித பணிகளில் தங்களை ஈடுபடுத்தும் பெண்களுக்கு இது மிகவும் அவசியம். ஏனெனில் குடும்ப பொறுப்புகள், அலுவலகப் பொறுப்புகள், குழந்தைகளின் பொறுப்புகள் என்று பலவகையான காரணங்களால் உணவு, உறக்கம் என பெண்கள் அனைத்தையும் குறைத்துக் கொள்கிறார்கள். இதன் தாக்கம் அவர்களது உடல் ஆரோக்கியத்தில் ஏற்படுகின்றது. ஆனால் நீண்ட காலத்திற்கு இவ்வாறு செய்தால் அது பெண்களின் உடலில் அபாயகரமான நோய்களை ஏற்படுத்தக் கூடும்.
வாழ்க்கை முறை காரணமாக முன்னர் இருந்ததை விட இப்பொழுது பெண்களுக்கு மூப்பு மிக சிறிய வயதிலேயே வந்து விடுகிறது. தோல் சுருக்கம், வலுவிழந்த எலும்புகள், ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மை காரணமாக பலவித நோய்கள் அவர்களை சூழ்ந்து கொள்கின்றன. இவை அனைத்தையும் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை சிறு வயதிலிருந்து பழகிக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். பெண்கள் தங்களது உணவில் சில குறிப்பிட்ட பொருட்களை சேர்த்துக் கொண்டால் எளிய வழியில் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இது பெண்களின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் அல்லாமல் உள்ளிருந்தும் அவர்களுக்கு ஆற்றலையும் சக்தியையும் அளிக்கும். அப்படிப்பட்ட சூப்பர் உணவுகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெந்தயம் (Fenugreek)
நமது இந்திய சமையலறைகளில் பயன்படுத்தப்படும் வெந்தயம் உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு வெந்தயம் அதிகப்படியான பலன்களை அளிக்கின்றது. இதை பயன்படுத்துவதால் மெனோபாசில் (Menopause) ஏற்படும் பிரச்சினைகள், குறைவான தாய்ப்பால் உற்பத்தி, மாதவிடாய் பிரச்சனைகள், உடல் பருமன், சரும பிரச்சனைகள் போன்றவற்றுக்கும் தீர்வு காணலாம்.
வீட்கிராஸ் சாறு (Wheatgrass Juice)
வீட்கிராஸ் சாறு குடிப்பதற்கு மிக சுவையாக இருக்கும். அதே போல் இதன் ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம். இது ஒரு சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகின்றது. இது பெண்களுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் மிக ஏற்றதாகவும் நன்மை விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளது. ஒரு கிளாஸ் வீட்கிராஸ் சாறு குடித்தால் பெண்களின் கருவுறுதல் மேம்படும் என்று கூறப்படுகிறது. இது ஹார்மோன் கோளாறுகளையும் சரி செய்கிறது.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற... குறைந்த GI கொண்ட சில பழங்கள்!
அஸ்வகந்தா (Ashwagandha)
ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் அஸ்வகந்தா உடலில் ஏற்படும் பலவித பிரச்சனைகளை சரி செய்ய உதவியாக இருக்கின்றது. ஆண்கள் பெண்கள் என இரு பாலருக்கும் இது இயற்கையான மருந்தாக உள்ளது. இதை உட்கொள்வது பெண்களின் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்தவும், கருவுறுதல் பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. இது மட்டுமின்றி பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளிலிருந்து நிவாரணம் அளிப்பதிலும் இது பயனுள்ளதாக கருதப்படுகிறது.
முருங்கை இலை (Moringa)
முருங்கை இலை பலவித பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றது. இது ஆக்சிடென்ட், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தவிர இதில் புரதச்சத்து, நீரிழிவு எதிர்ப்பு ஆகிய பண்புகளும் அதிகமாக உள்ளன. இதன் காரணமாக உடலில் ஏற்படும் பலவித பிரச்சினைகளுக்கு இதன் மூலம் நிவாரணம் பெறலாம். முருங்கை இலையை உட்கொள்வதால் பெண்களின் சமநிலையற்றத் ஹார்மோன் பிரச்சனை சீராகிறது. மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் வலிக்கும் இது நிவாரணம் அளிக்கிறது. அதிக அலைச்சல் மற்றும் உழைப்பினால் ஏற்படும் சோர்வையும் இது சரி செய்கின்றது. முருங்கை இலையை பொடி செய்துகொண்டு அதை தேநீரில் கலந்து சாப்பிடுவதும் பயனளிக்கும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உங்கள் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான 5 அறிகுறிகள் இவைதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ