கோவிட்-19 தடுப்பூசி இந்தியா முழுவதும் விநியோகிக்க 80,000 கோடி ரூபாய் இருக்கிறதா?...

"நான் இந்த கேள்வியைக் கேட்பதற்கான காரணம் என்னவென்றால், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் நம் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டு செயல்பட வேண்டும்" - Serum Institute of India தலைவர் ஆதார் பூனவல்லா...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2020, 05:39 AM IST
  • தடுப்பூசி உற்பத்தியாளர்கள் நம் நாட்டின் தேவைகளுக்கு சேவை செய்ய திட்டமிட்டு செயல்பட வேண்டும்...
  • முழு உலகிற்கும் அல்லது குறைந்தபட்சம் 90 சதவிகிதத்தினருக்கும் தடுப்பு மருந்து கிடைக்க குறைந்தது 2024ஆம் ஆண்டு ஆகிவிடும்...
  • சீரம் நிறுவனம் செப்டம்பர் 16 ஆம் தேதி, கோவிட் -19 தடுப்பூசிக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை மறுதொடக்கம் செய்ய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலிடம் (DCGI) ஒப்புதல் பெற்றது...
கோவிட்-19 தடுப்பூசி இந்தியா முழுவதும் விநியோகிக்க 80,000 கோடி ரூபாய் இருக்கிறதா?...  title=

புனே: கோவிட் தடுப்பு மருந்து விநியோகத்திற்காக அடுத்த ஒரு வருடத்தில் மத்திய அரசிடம் இருந்து 80,000 கோடி ரூபாய் கிடைக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (Serum Institute of India) தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனவல்லா (Adar Poonawalla).

உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வரும் ஆதர் பூனவல்லா 39 வயது இளைஞர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவரது நிறுவனம் தயாரிக்கிறதாக கூறப்படுகிறது. ட்விட்டரில் பதிவிட்ட அவர், "நான் இந்த கேள்வியைக் கேட்கிறேன், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் நம் நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டு செயல்பட வேண்டும். சுகாதார அமைச்சகம் தடுப்பு மருந்தை வாங்கி, இந்தியா முழுவதும் விநியோகம் செய்ய வேண்டும். இது தான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நம் முன் இருக்கும் மிகப்பெரிய சவால், அதை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பது மிகவும் முக்கியமான விஷயம்"  என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மத்திய சுகாதார அமைச்சகம் (Union Health Ministry) மற்றும் பிரதமர் அலுவலகத்தை (Prime Minister's Office) அவர் தனது பதிவில் டேக் (tag) செய்துள்ளார்.  

தனது அடுத்த ட்வீட்டில், "இந்த கேள்வியை நான் கேட்கிறேன், ஏனென்றால் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் கொள்முதல் மற்றும் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் நம் நாட்டின் தேவைகளுக்கு சேவை செய்ய திட்டமிட்டு செயல்பட வேண்டும்."

சமீபத்தில் ஒரு நேர்காணலில், அவர் தடுப்பு மருந்து கிடைப்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய அவர், "யதார்த்தமாக பார்த்தால், முழு உலகிற்கும், இந்த கிரகத்தில் உள்ள அனைவருக்கும், அல்லது குறைந்தபட்சம் 90 சதவிகிதத்தினருக்கும் தடுப்பு மருந்து கிடைக்க குறைந்தது 2024ஆம் ஆண்டு ஆகிவிடும்" என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக, சீரம் நிறுவனம் (SII) செப்டம்பர் 16 ஆம் தேதி, கோவிட் -19 தடுப்பூசிக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை மறுதொடக்கம் செய்ய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலிடம் (DCGI) ஒப்புதல் பெற்றது.

தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் (Data Safety Monitoring Board (DSMB)) வழங்கியுள்ள பரிந்துரைகளைத் தொடர்ந்து, அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிட் -19 தடுப்பூசிக்கான மறுபதிவு நடைமுறையை மறுதொடக்கம் செய்ய DGCIயிடம் சீரம் நிறுவனம் அனுமதி கோரியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read | Dengue கொசுக்கள் கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் தெரியுமா?

Trending News