வெள்ளை முடி பிரச்சனை இப்போதெல்லாம் சாதாரணமாகி வருகிறது. பெரும்பாலான மக்கள் இதை சமாளிக்க பல வகையான முயற்சிகளை செய்கிறார்கள். சிலர் விலையுயர்ந்த பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், சிலர் முடிக்கு நிறம் பூசிகிறார்கள். சிலரோ ஒன்றிரண்டு முடி வெளுத்திருந்தால் அவற்றை பிடுங்கிவிடுகிறார்கள்.
பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க, முடி நரைக்கத் தொடங்கும். எனினும், இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் என இவர்களிடமும் இந்த பிரச்சனை காணப்படுகின்றது. இளநரை பிரச்சனைக்கு தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, கூந்தலில் ரசாயனங்களின் பயன்பாடு எனப் பல காரணங்கள் உண்டு. இந்த காரணங்களால், கூந்தல் வயதுக்கு முன்பே வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. எனவே உங்கள் உணவில் சில முக்கிய சத்துக்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் நரை முடி பிரச்சனையை அடி வேரோடு சரிசெய்ய முடியும். அவை என்னவென்று இங்கே தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க | High cholesterol இருந்தால் என்ன ஆகும்; அறிகுறிகள் மற்றும் காரணங்கள்
முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
முட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முட்டையில் அதிகளவு புரதம் நிறைந்துள்ளது. எனவே இது முடியை மேம்படுத்தவும், வெள்ளை முடியை போக்கவும் உதவும். எனவே முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ள இன்றே ஆரம்பியுங்கள்.
தயிர் சாப்பிட்டால் முடி வெள்ளையாகாது
ஒரு கப் சாதாரண தயிரில், 28 சதவீதம் அளவிற்கு வைட்டமின் பி 12 உள்ளது, இறைச்சி அல்லது கோழிக்கறியில் உள்ள வைட்டமின் பி 12 சத்தை விட, தயிரில் உள்ள வைட்டமின் பி 12 சத்தை, நம் உடல் எளிதாக உறிஞ்சுகிறது. எனவே இது உங்கள் நரை முடியை கருப்பாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் விரும்பினால், கோடை காலத்தில் தயிர் லஸ்ஸி செய்தும் சாப்பிடலாம்.
வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
வெந்தயம் முடியை கருமையாக்க உதவுகிறது. உண்மையில், வெந்தயத்தில் இரும்பு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது முடியில் மெலனின் என்ற தனிமத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது. தகவலுக்கு, மெலனின் இல்லாததால், முடி விரைவில் வெண்மையாக மாறத் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் மெலனின் உள்ள பொருட்களை உட்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பச்சை காய்கறிகளும் உதவும்
இது தவிர பச்சைக் காய்கறிகளை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பி-6, வைட்டமின் பி-12 மற்றும் பிற சத்துக்கள் பச்சைக் காய்கறிகளில் காணப்படுகின்றன. எனவே பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொண்டால் வெள்ளை முடி நீங்கி கருப்பாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தலவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Care Tips: இரவில் சாதம் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR