கருமையான கூந்தலுக்கு சிறந்த எண்ணெய்: இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் முடி நரைக்கும் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே முடி வெள்ளையாக மாற ஆரம்பித்து விடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் உங்களின் கூந்தலுக்கு சிறப்பு கவன, செலுத்த வேண்டி இருக்கும். எனவே உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதன் மூலம், உங்கள் தலைமுடியை இயற்கையாகவே கருமையாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெள்ளை முடியைப் போக்கலாம். அவை என்னவென்று உனக்கே தெரிந்து கொள்வோம்.
இந்த முறையில் வெள்ளை முடியை சுலபமாக கருப்பாக்கலாம்
தேங்காய் எண்ணெய்
தலைமுடியை கருமையாக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது மிகவும் அவசியம். வெள்ளை முடியை கருமையாக்க, தேங்காய் எண்ணெயை மந்த இலைகளை சேர்த்து சூடாக்கினால் போதும். எண்ணெயை சிறிது ஆற விடவும், இப்போது அதை மயிர்க்கால் முதல் முடியின் அடிப்பகுதி வரை தடவவும். குறைந்தது 4 மணி நேரம் அப்படியே விடவும். பின்னர் முடியை ஷாம்பு கொண்டு கழுவவும்.
மேலும் படிக்க | அதிக பாதாம் ஆபத்தாகலாம்: ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் முடியை கருப்பாக்குவதற்கும் நன்மை பயக்கும். ஆலிவ் எண்ணெயில் பெருஞ்சீரகம் கலந்து கூந்தலில் தடவி வந்தால் முடி கருப்பாகும். இதைப் பயன்படுத்த, ஒரு சிறிய ஸ்பூன் பெருஞ்சீரகத்தை ஆலிவ் எண்ணெயில் போட்டு உச்சந்தலையில் மற்றும் முடி முழுவதும் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து, 3 மணி நேரம் கழித்து முடியைக் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தலைமுடி இயற்கையாக கருப்பாக மாறும்.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெய் அனைத்து முடி பிரச்சனைகளுக்கும் ஒரு சஞ்சீவியாக கருதப்படுகிறது. கடுகு எண்ணெய் வெள்ளை முடியைப் போக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தேங்காய் எண்ணெய் போல் மருதாணி இலையை கடுகு எண்ணெயில் சூடாக்கி தலைமுடியில் தடவலாம். இதனால் முடி விரைவில் கருப்பாக மாறும். இந்த எண்ணெயை வாரத்திற்கு 3 முறை தடவவும்.
மேலும் படிக்க | அஜீரண பிரச்சனையை ஓட விரட்ட புதினா இந்த வகையில் பயன்படுத்தவும்
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ