கொலஸ்ட்ரால் அடைப்பு என்றால் என்ன? இதன் அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்

Cholesterol Symptoms: கால்களின் நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேரும்போது, ​​கால்களுக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாக, பாதங்களில் வலி, உணர்வின்மை, கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 25, 2024, 04:57 PM IST
  • ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
  • கண்டிப்பாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • சரியான எடையை பராமரிக்க வேண்டும்.
கொலஸ்ட்ரால் அடைப்பு என்றால் என்ன? இதன் அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள் title=

Cholesterol Symptoms: இரவில் தூங்கும்போது சிலருக்கு சில பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இவற்றில் பல சாதாரணமானவையாக இருக்கலாம். எனினும், சில பிரச்சனைகளுக்கு உடனடி கவனம் தேவைப்படும்.

இரவு தூக்கத்தில் உங்கள் கால்களில் வலி இருக்கிறதா? உணர்வின்மை அடிக்கடி ஏற்படுகிறதா? அப்படி இருந்தால், இவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது தீவிரமானதாக இருக்கலாம். இது கொலஸ்ட்ரால் அடைப்புக்கான அறிகுறியாக இருக்கக்கூடும். இந்த அறிகுறிகளைக் கண்டால் உடனடியாக மருத்துவரை சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில், இது மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும்.

கொலஸ்ட்ரால் அடைப்பு 

கொலஸ்ட்ரால் என்பது நமது உடலில் காணப்படும் ஒரு வகை கொழுப்பாகும். இது அனைவரது உடலிலும் இருக்கும். உடலின் சில இன்றியமையாத வேலைகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். ஆனால் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகி அது நரம்புகளின் சுவர்களில் படிந்தால், அது கொலஸ்ட்ரால் அடைப்பு (Cholesetrol Blockage) என்ற தீவிர நிலையை ஏற்படுத்துகின்றது. இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகின்றது. இதன் காரண்மாக இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. 

கால்களில் வலி மற்றும் உணர்வின்மை ஏற்பட காரணம் என்ன?

கால்களின் நரம்புகளில் கொலஸ்ட்ரால் சேரும்போது, ​​கால்களுக்கு இரத்த ஓட்டம் குறைகிறது. இதன் காரணமாக, பாதங்களில் வலி, உணர்வின்மை, கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த நிலை மருத்துவ மொழியில் பெரிஃபெரல் ஆர்டரி நோய் (Peripheral Artery Disease) என்று அழைக்கப்படுகிறது.

நரம்புகளில் ஏற்படும் கொலஸ்ட்ரால் அடைப்புக்கு மற்ற அறிகுறிகளும் உள்ளன. அவற்றை பற்றி இங்கே காணலாம். 

கொலஸ்ட்ரால் அடைப்பின் அறிகுறிகள்:

- கால் தசைகளில் வலி
- குளிர்ச்சியான பாதம்
- கால்களில் ஆறாத காயங்கள்
- பலவீனம்
- சோர்வு

மேலும் படிக்க | உறக்கத்துக்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன தொடர்பு? டாக்டர் சொல்வது இதுதான்

கொலஸ்ட்ரால் அடைப்பு எதனால் ஏற்படுகின்றது?

- புகைப்பிடித்தல்
- உடல் பருமன்
- அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல்
- குடும்பத்தில் இதய நோயின் வரலாறு
- சர்க்கரை நோய்
- உயர் இரத்த அழுத்தம்

கொலஸ்ட்ரால் அடைப்பை எப்படி சரி செய்வது?

வாழ்க்கைமுறை மாற்றங்கள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் கொலஸ்ட்ரால் அடைப்புக்கு சிகிச்சையளிக்க முடியும்.

- வாழ்க்கை முறை மாற்றங்கள்: ஆரோக்கியமான உணவு முறை, தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், புகைபிடிக்காமல் இருப்பது, ஆரோக்கியமான எடையை பராமரித்தல் ஆகியவை அவசியம்.

- மருந்துகள்: கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகள் மற்றும் இரத்தத்தை மெலிக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

- அறுவை சிகிச்சை: இது தீவிரமாக இருந்தால், அந்த சந்தர்ப்பங்களில், அடைப்பை அகற்ற அறுவை சிகிச்சை சிலருக்கு தேவைப்படலாம்.

இயற்கையான முறையில் நிவாரணம் பெற

- ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
- புகைபிடிக்க கூடாது
- கண்டிப்பாக தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 
- மருத்துவ பரிசோதனை அவசியம்
- சரியான எடையை பராமரிக்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மூட்டுவலி, பலவீனம், இரத்தசோகை நீங்க.. ஊற வைத்த பாதாம் - கொண்டக்கடலை ஒன்றே போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News